பக்கம் எண் :

683
 
372.சோதியாய்ச் சுடரு மானார்

சுண்ணவெண் சாந்து பூசி

ஓதிவா யுலக மேத்த

வுகந்துதா மருள்கள் செய்வார்

ஆதியா யந்த மானார்

யாவரு மிறைஞ்சி யேத்த

நீதியாய் நியம மாகி

நின்றநெய்த் தான னாரே.

9

பொறிக்கும் உரியன உணர்த்தப்பட்டன, மூன்றும் ஒருவழிப் படாதது வழிபாடன்று. (சிவஞான சித்தியார் சூ: 1). ‘திருந்து’ என்பது நெய்த்தானத்திற்கு அடை நெய்த்தானனார்க்கு அன்று. திருந்திய இடம்.

9. பொ-ரை: ஆதியும் அந்தமும் ஆகியவராய், எல்லோரும் விரும்பித் துதிக்க, நீதியாகவும் தவம் முதலிய வகுக்கப்பட்ட நெறிகளாகவும், நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானப் பெருமான் ஒளியாகவும், அவ்வொளியை வெளிப்படுத்தும் சூரியன் முதலிய சுடர்ப் பொருள்களாகவும் ஆயினவராய், திருநீற்றைச் சந்தனமாகப் பூசி வேதம் ஓதி, நன்மக்கள் தம்மைத் துதித்தலால் தாம் அவர்களுக்கு அருள் செய்பவராவார்.

கு-ரை: சோதி - ஒளி. சுடர் - முச்சுடர், முச்சுடர்க்கண்ணும் நின்று ஒளிரும் முதற் பொருளே சோதி, அச்சோதிக்கும் இடம் முச்சுடர். ‘அருக்கனாவான் அரனுரு’ (தி.5. ஈற்றுத் திருப்பதிகம் 8). ‘நிலம் நீர் நெருப்புயிர் நீள்விசும்பு. நிலாப் பகலோன் புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்’ (தி.8 திருவாசகம்). என்பனவற்றால், சுடருளும் புணர்ந்து நின்றவன் முதல்வன். புணரும் இடம் சுடர் எனல் இனிது விளங்கும்.

‘சுண்ணவெண் சாந்து’ ‘சுண்ணவெண் சந்தனச்சாந்தும்’ (தி.4 ப.2 பா.1) ‘சுண்ண வெண்பொடி’ (தி.5 ப.10 பா.9). ‘சுண்ணத்தர் சுடு நீறுகந்தாடலர்’ (தி.5 ப.87 பா.7). உலகம் - உயர்ந்தோர், உலகம் வாய் ஓதி ஏத்த என்றும் தாம் உகந்து அருள்கள் செய்தார் என்றும் கொள்க. ஓதி - ஓதத்தையுடையது; கடல். வாய் - இடம்; ஓதிவாயுலகம் - கடலிடைப்பட்ட உலகம் எனலும் ஆம். ஆதியும் (முதலும்) அந்தமும் (முடிவும்) ஆனார். யாவரும் - எச் சமயத்தவரும். நீதி - நன்னெறி; நியாயம்; முறைமை. நியமம் - நிச்சயம். தவம் முதலிய பத்துமாம். (சைவ வினாவிடை 29) ‘நீதியானை நியம நெறிகளை ஓதியானை’