பக்கம் எண் :

682
 
371.பந்தித்த சடையின் மேலே

பாய்புன லதனை வைத்து

அந்திப்போ தனலு மாடி

யடிகளை யாறு புக்கார்

வந்திப்பார் வணங்கி நின்று

வாழ்த்துவார் வாயி னுள்ளார்

சிந்திப்பார் சிந்தை யுள்ளார்

திருந்துநெய்த் தான னாரே.

8

வீசிக்கொண்டு தரையில் பள்ளம் தோன்றவும், விரிந்த சடை வானத்தை அளாவ எட்டுத் திசைகளிலும் பரவவும் கூத்து நிகழ்த்தும் மேம்பட்டவராவார்.

கு-ரை: கால் அது:- அது சுட்டுப் பெயர் அன்று. முதனிலைப் பொருளே தனக்கும் உரியதாக நிற்பது. ஞாலம் - மண்ணுலகம். ஈண்டு ஆடநின்ற நிலம் குறித்தது. குழிய - குழியடைய, பள்ளமுற, நட்டம் - திருக்கூத்து. இது தமிழ்ப் பெயர், வடசொற் சிதைவு அன்று. கொட்டம் (கொள் + து + அம்) வட்டம் (வள் + து + அம்) போல்வது. மேலவர் - விண்ணவர் மால் ஒருபாகம்:- ‘இடமால் தழுவிய பாகம்’ (தி.4 ப.2 பா.4). ‘மாலுங்கொப்பளித்த பாகர்’ (தி.4 ப.24 பா.7) ‘மறிகடல் வண்ணன் பாகா’ (தி.4 ப.62 பா.8) ‘பாகம் மாலுடையர் போலும்’ (தி.4 ப.66 பா.8). ‘திருமாலோர் பாகன்’ (தி.4 ப.77 பா.5) அரியலாற்றேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே’.

8. பொ-ரை: முடிக்கப்பட்ட சடையின்மேலே கங்கையைச் சூடி மாலை நேரத்தில் தீயில் கூத்தாடும் பெருமானார் திருவையாற்றை அடைந்தவராய்த் தம்மைக் கும்பிடுபவராய் வணங்கி வழிநின்று வாழ்த்துபவராகிய அடியவர்களின் நாவில் நின்று, தியானம் செய்பவர் மனத்தில் உறைந்து சிறந்த நெய்த்தானத்தில் நிலையாகத் தங்கி விட்டார்.

கு-ரை: பந்தித்த - கட்டிய. புனலது:- ‘காலது’ (தி.4 ப.37 பா.7) என்பதற்கு உரைத்ததுணர்க. அந்திப்போது - மாலைவேளை. அனலும் - தீயிலும். அடிகள் - கடவுள். வந்திப்பார் - வந்தனை புரிபவர் (வாயின் உள்ளார்). வணங்கி நின்று வாழ்த்துவாருடைய வாயின் உள்ளார். சிந்திப்பாருடைய சிந்தையினுள்ளார். சிந்தித்தல் நினைப்பு. வாழ்த்துதல் உரையொலி. வந்தித்தல் மெய்த்தொழில் என முப்