| தேனமர் பொழில்கள் சூழத் | | | திகழுநெய்த் தான மேய | | | கூனிள மதியி னானைக் | | | கூடுமா றறிகி லேனே. | 6 |
| 370. | காலதிர் கழல்க ளார்ப்பக் | | | கனலெரி கையில் வீசி | | | ஞாலமுங் குழிய நின்று | | | நட்டம தாடு கின்ற | | | மேலவர் முகடு தோய | | | விரிசடை திசைகள் பாய | | | மாலொரு பாக மாக | | | மகிழ்ந்தநெய்த் தான னாரே. | 7 |
உடையவனாய், வண்டுகள் விரும்பித் தங்குகின்ற சோலைகள் நாற்புறமும் சூழ விளங்கும் நெய்த்தானத்தில் விரும்பி உறைகின்ற, வளைந்த பிறை சூடியபெருமானைக் கூடும் திறத்தை அறியாது உள்ளேனே! கு-ரை: வானவர் - விண்ணோர் பேரின்ப வீட்டினர். வைகலும் - நாள்தோறும். வைகுறு:- விடியற்பொழுதில் வழிபடல் வேண்டுமென்பது குறித்து நின்றது, வழிபாட்டிற்குரிய சிறந்த பொழுது அதுவேயாகும். சிவாகம விதியிற்காண்க. மலர்கள் தூவி வழிபட்டவர்க்குச் சங்கரன் செய்வன எல்லையுட்படாதன ஆதலின் ‘அருள்கள்’ என்று பன்மையிற் கூறலாயிற்று. தான் - சங்கரனைக் குறித்து நின்ற படர்க்கையொருமைப் பெயர். அசையுமாம் ‘தான் அலாது உலகம் இல்லை’ (தி.4 ப.40 பா.1) ‘தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன்’ (தி.6 ப.98) ‘தங்கோல நறுங்கொன்றைத் தார் அருளாது ஒழிவானோ’ (தி.4 ப.12 பா.6) என்னும் இடத்தில் ‘தான்’ ‘தன்’ இரண்டும் எதுகை நோக்கிய திரிபாதல் உணர்க. சங்கரன் - நலன் நல்குவான். ‘செங்கண் ஏற்றன்’ ‘செங்கண் மால்விடை’ யினன். தேன் அமர் - தேன் பொருந்திய; வண்டுகள் விரும்புகின்ற. கூன் இளமதியம். வளைந்த பிறை. 7. பொ-ரை: திருமாலைத் தம் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு மகிழ்ந்த நெய்த்தானப் பெருமானார் காலிலே அசைகின்ற கழல்கள் ஒலியெழுப்ப, ஒளிவீசுகின்ற தீயினைக் கையில் வைத்து
|