| 368. | காடிட மாக நின்று | | | கனலெரி கையி லேந்திப் | | | பாடிய பூதஞ் சூழப் | | | பண்ணுடன் பலவுஞ் சொல்லி | | | ஆடிய கழலர் சீரா | | | ரந்தணெய்த் தான மென்றும் | | | கூடிய குழக னாரைக் | | | கூடுமா றறிகி லேனே. | 5 |
| 369. | வானவ வணங்கி யேத்தி | | | வைகலு மலர்க டூவத் | | | தானவர்க் கருள்கள் செய்யுஞ் | | | சங்கரன் செங்க ணேற்றன் | |
பொழில்களின் அடை, அடிதரு கழல் - திருவடியிற் பூட்டிய வீரக் கழல், ஆர்ப்ப - ஒலிக்க. அண்ணலார் - சிவனார்க்கு இடுகுறிப் பெயர். ‘ஆடல் மேவிய அண்ணலார்’ (தி.12 பெரிய. ஏயர்கோன் 98) 5. பொ-ரை: கையில் ஒளிவீசும் நெருப்பை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு பாடுகின்ற பூதங்கள் தம்மைச் சூழப் பண்ணோடு பல பாடல்கள் பாடி ஆடிய திருவடிகளை உடையவராய்ச் சிறப்புமிக்க அழகிய குளிர்ந்த நெய்த்தானத்தில் எப்பொழுதும் உறைகின்ற இளையவராகிய எம்பெருமானை அடையும் திறத்தை அறியாது இருக்கின்றேனே! கு-ரை: காடு இடம் ஆக நின்று ஆடிய கழலர். கனல் எரி ஏந்தி ஆடிய; பாடிய பூதம் சூழ ஆடிய; பண்ணுடன் பலவும் சொல்லி ஆடிய; சீரார் - சீருடையார். சீர் ஆர் நெய்த்தானம் எனலும் பொருந்தும். அம் - அழகு, தண் - குளிர்ச்சி, என்றும் கூடிய - எப்பொழுதும் வீற்றிருந்தருளும். குழகனார் - அழகனார், இளமையர். ‘குழகராய் இளமடந்தையர்க்கு உருகுவோர்’ (பாரத. சூதுபோர். 66) என்றலாற் காளையர் என்னும் பொருட்டுமாம். கூடும் ஆறு - சிவயோக நெறி. 6. பொ-ரை: தேவர்கள் நாடோறும் வணங்கித்துதித்து மலர்களை அருச்சிக்க, அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் நன்மை செய்பவனாய், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய காளையை
|