| 367. | வடிதரு மழுவொன் றேந்தி | | | வார்சடை மதியம் வைத்துப் | | | பொடிதரு மேனி மேலே | | | புரிதரு நூலர் போலும் | | | நெடிதரு பொழில்கள் சூழ | | | நின்றநெய்த் தான மேவி | | | அடிதரு கழல்க ளார்ப்ப | | | வாடுமெம் மண்ண லாரே. | 4 |
னாய், பலசோலைகளாலும் சூழப்பட்ட நெய்த்தானமாகிய அவன் உகந்தருளும் திருப்பதியைக் குறையிரந்து வேண்டித் கொள்ளும் திருவடித்தொண்டர்களுக்கு இளையவனாகிய எம்பெருமான் அடைவதற்கு எளியவனாய் உள்ளான். கு-ரை: பிற - பிறை; பிறத்தலுடையது. பிறைதருசடை- பிறையைத் தரப்பெற்ற சடை. பிறை இடப்பொருள் (தானி). சடை இடம் (தானம்). உறைதரம் - தங்குதல். உறு - உறை. நிறு - நிறை. குறு - குறை. என முதனிலை ஐஉறல் உணர்க. குறைதரும் அடியவர் - குறையிரந்து வேண்டிக்கொள்ளும் திருவடிக் தொண்டர். ‘நாளும் மிகும் பணிசெய்து குறைந்தடையும் நன்னாளில்’ (தி.12 பெரிய. அப்பர் 45) ‘ இல்வாழ்வு பெறத்தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என் கொல் எனத்தொழுதார்’ (தி.12 பெரிய. அப்பர் 73) என்புழிப்படும் நன்றியுமாம். சிவ. போ. மாபாடியம். சூ. 12 வெண்பா (‘தன்னை அறிவித்து’) உரையில் உள்ளதுணர்க. 4. பொ-ரை: சிள்வீடு என்ற வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ நிலைபெற்ற நெய்த்தானத்தில் விரும்பி உறைந்து திரவடிகளில் அணிந்த கழல்கள் ஒலிக்குமாறு கூத்து நிகழ்த்தும் எம் மேம்பட்ட தலைவர் காய்ச்சி வடிக்கப்பட்டுக் கூரிதாக்கப்பட்ட மழுவைக் கையிலேந்தி, நீண்ட சடையிலே பிறையை அணிந்து திருநீறு அணிந்த மார்பிலே பல நூல்களை முறுக்கி அமைக்கப்பட்ட பூணூலை அணிந்தவராவார். கு-ரை: வடிதரு மழு - வடித்துக் கூறியதாக்கிய மழுப்படை. வார் (சடை) - வார்ந்த சடை; நீள் சடையுமாம். பொடி தருமேனி - பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறு’. புரிதரு நூலார் - ஒன்பான் கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்’ அணிந்தவர். நெடி - சிள்வண்டு,
|