பக்கம் எண் :

678
 
365.காமனை யன்றுகண் ணாற்

கனலெரி யாக நோக்கித்

தூமமுந் தீபங் காட்டித்

தொழுமவர்க் கருள்கள் செய்து

சேமநெய்த் தான மென்னுஞ்

செறிபொழிற் கோயின் மேய

வாமனை நினைந்த நெஞ்சம்

வாழ்வுற நினைந்த வாறே.

2

366. பிறைதரு சடையின் மேலே

பெய்புனற் கங்கை தன்னை

உறைதர வைத்த வெங்க

ளுத்தம னூழி யாய

நிறைதரு பொழில்கள் சூழ

நின்றநெய்த் தான மென்று

குறைதரு மடிய வர்க்குக்

குழகனைக் கூட லாமே.

3

2. பொ-ரை: மன்மதனை ஒரு காலத்தில் நெற்றிக்கண்ணால் நெருப்பாகப் பார்த்து அழித்து, நறும்புகையும் தீபமும் காட்டித் தொழும் அடியவர்களுக்கு அருள்கள்செய்து, எல்லா உயிர்களுக்கும் பாதுகாவலைத் தரும் சோலைகளால் சூழப்பட்ட நெய்த்தானம் என்னும் இருப்பிடத்தில் பொருந்தியுள்ள சிவபெருமானைத் தியானிக்கும் அடியேனுடைய மனம் நல்வாழ்வுக்கு உரிய செய்தியைத் தியானித்த செயல் போற்றத்தக்கது.

கு-ரை: காமனை - மன்மதனை. அன்று சிவபிரான் யோகிருந்த காலத்தில், கண்ணுதல் நெற்றி(த்தீ)க் கண்ணால், கனல் எரி - கனலும் எரி, தூமம் - புகை, தீபம் - திருவிளக்கு, காட்டி:- தூப தீபங்களை, பூசிக்கப் பெறும் பரமேசுவர சந்நிதியிற் சிவாகம விதிப்படி அசைத்துக் காணச்செய்து. தொழுமவர்:- வழிபடும் அடியார். சேமம் - காவல். வாமன் - சிவபிரான்.

3. பொ-ரை: பிறைதங்கிய சடையின்மேலே கங்கைதங்குமாறு வைத்த எங்கள் மேம்பட்ட தலைவனாய், பல ஊழிகளின் வடிவின