37. திருநெய்த்தானம் பதிக வரலாறு: திருவையாறமர்ந்த தேனையுண்ட பேரின்பத்தொடு திருநெய்த் தானத்தைப் பணிந்து பாடியருளிய திருப்பதிகங்களுள் ஒன்று இத்திருப்பதிகம். திருநேரிசை பதிக எண்: 37 திருச்சிற்றம்பலம் | 364. | காலனை வீழச் செற்ற | | | கழலடி யிரண்டும் வந்தென் | | | மேலவா யிருக்கப் பெற்றேன் | | | மேதகத் தோன்று கின்ற | | | கோலநெய்த் தான மென்னுங் | | | குளிர்பொழிற் கோயின் மேய | | | நீலம்வைத் தனைய கண்ட | | | நினைக்குமா நினைக்கின் றேனே. | 1 |
1. பொ-ரை: கூற்றுவன் கீழே விழுமாறு அவனை உதைத்த வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டும் என்தலைமேல் இருத்தலைப் பெற்றேன். ஆதலின் மிகச் சிறப்பாகக் காட்சிவழங்குகின்ற அழகிய நெய்த்தானத் திருப்பதியின் குளிர்ந்த பொழில்களிடையே அமைந்த கோயிலில் விரும்பி உறைகின்ற நீலகண்டனே! தற்போதம் அற்று நின் போதத்தால் தியானிக்கும் வகையில் உன்னைத் தியானிக்கின்றேன். கு-ரை: காலனை வீழச் செற்ற கழலடி:- காலின் கீழ்க் காலன் றன்னைக் கடுகத்தான் பாய்ந்து ‘காற்றனார் காலற் காய்ந்து’. (தி.4 ப.36 பா.6,8.) காலனைச் செற்ற கழலடி யிரண்டும் என் மேலனவாகியிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்றுகின்ற. (தி.4 ப.35 பா.9) கோலம் - அழகு, குளிர் பொழிற் கோயில் -குளிர்ந்த சோலைக்குள் இருக்கும் திருக்கோயில். மேய - மேவிய; விரும்பி எழுந்தருளிய. நீலம் வைத்த அனைய கண்ட - நீல நிறத்தை வைத்தாற்போன்ற நஞ்சுண்டு உட்புகாது நிறுத்திக் காட்டுஞ் சீகண்டனே. நினைக்குமா - தற்போதம் அற்று நின் போதத் தால் நினைக்குமாறு.
|