தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே. | |
| 9 |
1080. நாடி நாரணன் நான்முக னென்றிவர் தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத் தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. | |
| 10 |
1081. மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன் சதுரன் சிற்றம் பலவன் திருமலை | |
|
| திசையை நோக்கிக் கைகூப்புவார் செய்த வினைகள் விரைந்து அவர்ளை விட்டு ஓடும். இஃது உண்மை. |
| கு-ரை: மேருவாகியவில். வட்டப்பட - அரைவட்டமாக அமைய. வாங்கி - வளைத்து. அவுணர் - திரிபுரத்தசுரர்கள். வல்லை வட்டம் மதில்; வல் - விரைவு, வட்டம் மதில் - வட்ட வடிவாயமைந்த கோட்டைகள். ஒல்லை - விரைவு. வட்டம் - தொழுவாரைச் சூழ்ந்த இடம். |
| 10. பொ-ரை: திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து தேடியும் வானிற் பறந்து திரிந்தும் காணவல்லாரல்லர்; மாடமாளிகைகள் சூழ்ந்த திருத்தில்லையில் திருவம்பலத்தில் நின்று ஆடுகின்ற பெருமானது திருவடிகள் அன்பால் நினையும் என் நெஞ்சத்து விளங்கி இருக்கும். |
| கு-ரை: முதல்வனை அன்பால் அகத்தே நினைவார் அவனை உணரப் பெறுவர் என்பது கருத்து. |
| 11. பொ-ரை: இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன்; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக்காத்து அழிக்கவல்ல சதுரப்பாடுடையவன்; திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவன். இப் பெருமான் எழுந்தருளியுள்ள திருமலை எனப்படும் திருக்கயிலாய மலையை அசையும்படி, செருக்கினால் ஆரவாரம் செய்து எடுத்த இராவணனுடைய பத்து முடிகளும் வருந்தும்படி மெள்ள ஊன்றும் செம்மையான திருவடியைச் சென்று கைதொழுது உய்க. |