பக்கம் எண் :

260திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.

11

திருச்சிற்றம்பலம்

     கு-ரை: மதுரம் - இனிமை. சர்வசங்கார காலத்துப் பெருமானது சினத்தைத் தணித்து மீண்டும் படைத்தற்றொழிலைச் செய்யவல்ல மொழியுடையாள் ஆதலின் 'மதுரவாய்மொழி மங்கை' என்றார். பங்கு - இடப்பாகம். செம்பாதியும் கொண்டதையல் (முத்துக் - பிள்ளை.) சதுரன் - சதுரப்பாடு உடையவன். "பூவண்ணம் பூவின் மணம்போல மெய்ப்போத இன்பம், ஆவண்ணம் மெய்கொண்டவன் தன் வலியாணைதாங்கி, மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்யவாளா மேவு அண்ணல்" (திருவிளையாடல்) ஆதலின் சதுரன் என்றார். திருமலை -கயிலைமலை. கோயில் என்பது சிதம்பரத்தைக் குறித்தலைப் போலத் திருமலை என்பது கயிலையைக் குறிக்கும். அதிர - நடுக்கத்தால் அதிர்ச்சியடைய, ஆர்த்து - ஆணவத்தால் செருக்கி ஆர வாரித்து. மிதிகொள் சேவடி - மிதித்தலைக் கொண்ட எனவும் மிதித்து மீள அருள் செய்துகொண்ட எனவும் இருபொருள் படநின்றது.

 

திருநாவுக்கரசர் புராணம்
அருட்பெரு மகிழ்ச்சி பொங்க "அன்னம்பாலிக்கும்" என்னும்
திருக்குறுந் தொகைகள் பாடித் திருவுழ வாரங் கொண்டு
பெருத்தெழு காத லோடும் பெருந்திருத் தொண்டு செய்து
விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்ட லாட

-தி.12 சேக்கிழார்