| 
			
			| | (ஐந்தாம் திருமுறை) | ஐந்தாம் திருமுறையின் உரைச்சிறப்பு | 59 | |
 | 
 |  |               |                                       | முதல்வன், உயிர்கள் தன்னை உணர்ந்து உய்யக்கருதி             அத்திருமேனிகளைக் கொண்டான்' எனவும், 'உரு-மகேச்சுரத் திருவுருவங்கள்; அருயோகியர்             பிரணவம், பிராசாதம் முதலிய மந்திரங்களின் துணையால் அகத்தே காணும் ஒளியுரு'             எனவும் எழுதினமை, "கருத்தன்" (தி.5. ப.4. பா.9. கு-ரை) என்றதற்கு, 'தலைவன்;             தன்வயமுடையவன்'. 'சுட்டுணர்வாகிய பிரபஞ்சம், சுட்டுணர்வின்றி நின்ற சங்காரத்தின்             வழியல்லது சுதந்திரமின்றி நிற்றலான்' என விளக்கினமை, |              |                                                               | "துணையி லாமையின் தூங்கிருட் பேய்களோ டணைய லாவ தெமக்கரி தேயெனா
 இணையி லாஇடை மாமரு தில்லெழு
 பணையி லாகமம் சொல்லுந்தன் பாங்கிக்கே"
 |  |              | என்பதில், (தி.5.ப.15.பா.4.)             'தூங்கிருள்' என்பதற்கு 'ஊழி' என்றும், 'பாங்கி' என்பதற்கு, 'பக்கத்தில் உள்ள             உமையம்மை' என்றும் பொருள் கூறி, 'ஊழியில் இறைவனும், அம்மையும், பேய்களும் அன்றிப்             பிறர் இரார்' என்றும், 'ஆகமம் அம்மைக்கே முதற்கண் விளக்கப்படுவது' என்றும்             உரைத்தமை, |              | "அடிகள் சேவடிக் கீழ்நாம் இருப்பதே" (தி.5.ப.32.பா.1) எனத் திருப்பூந்துருத்தித்             திருப்பதிகத்துள் எல்லாப் பாடல்களிலும் குறிக்கப்பட்ட இறைவன் திருவடிக்கீழ்             இருத்தலை, 'இன்புறுநிலை' என்றும். "ஓங்குணர்வி னுள்ளடங்கி உள்ளத்துள் இன்பொடுங்கத்             - தூங்குவர்மற்றேதுண்டு சொல்" என்றாற் போல நிட்டையின் இயல்பு கூறுவனவற்றிற்கெல்லாம்             இது போலும் திருமுறைகளே மூலம் என்றும் தெளிவித்தமை, |              | 'உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்' (தி.5.ப.68,பா,1) எனக் குறிக்கப்பட்ட             அகத்தாமரையின் இயல்பை விளக்குமிடத்து, 'ஏனைத் தாமரைபோல் நீர்க்கீழ்த் தோன்றாத             பீசம் முதலாகத் தோன்றி முளைத்த ஒப்பற்ற வெண்டாமரை' எனச் சிறப்பித்துரைத்தமை             முதலியவை அரிய பல சித்தாந்த நுட்பங்களைத் திருமுறையில் வைத்து உணர்தற்குத் துணைசெய்வனவாம். |              | இலக்கணக் குறிப்புக்கள்: |              | மொழித்திறத்தின்             முட்டறுத்து முதல்நூற் பொருளை உள்ளவாறுணர்தல், இலக்கணம் வல்லார்க்கே இயல்வதாகும்             என்பர். அத்தகைய இலக்கணக் குறிப்புக்களும் பல இவ்வுரையுட் |  |  | 
 |  |