பக்கம் எண் :

822திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

ஆடல் வேடத்த னம்பலக் கூத்தனைப்
பாட லாளர்க்கல் லாற்பய னில்லையே.
7
2073.
நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலன்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே.
8
2074.
கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.
9

உடையவனாகிய அம்பலக்கூத்தனைப் பாடுபவர்க்கு அல்லால் மற்றையோர்க்குப் பயன் இல்லை.
     கு-ரை: கூட வேடம் - தாழ்வை மறக்கக்கூடிய வேடம். குழுமிலென் - கூடினால் என்ன பயன் விளையும். வாடி - மெய்வருந்தி. ஊன் - மாமிசம். வருத்தி - இறக்கும்படி வருத்தி உண்டு. ஆடல் வேடத்தன் - ஆடுகின்ற தோற்றமுடையவன். பாடலாளர்க்கு அல்லால்- பாடுபவர்களுக்கேயல்லாமல்.
     8. பொ-ரை: நன்கு தவம்நோற்றாலும், உண்ணாவிரதம் கிடப்பினும், மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும், சென்று நீரிற்குளித்துத் திரிந்தாலும் என்ன பயன்? என்றும் ஈசன் என்பார்க்கேயன்றி பற்றையோர்க்கு இவற்றாற் பயன் இல்லை.
     கு-ரை: நோற்றல் - தவம் செய்தல். குன்றம் - மலை. இருந்தவம் - பெரியதவம்.
     9. பொ-ரை: கோடிதீர்த்தங்கள் தோறும் கலந்து குளித்து அவற்றில் நீராடிக் கிடந்தாலும் அரனிடத்து அன்பு இல்லையாயின். ஓடும் இயல்பினை உடைய நீரை ஓட்டைக்குடத்திலே நிறைத்து மூடிவைத்திட்ட மூர்க்கன் ஓருவனின் செயலோடே அது ஓக்கும்.
     கு-ரை: கோடி - பலவாய எண்ணிற்கு ஓர் வரையறை. பல