என்பது பொருள். ஓடும் நீரினை- ஓடும் தண்ணீரை. அட்டி - அள்ளிமுகந்து. மூர்க்கன் - அறிவில்லாதவன். 10. பொ-ரை: மற்றும் நற்றவங்கள் பல செய்து வருந்தினால் என்ன பயன்? திருக்கயிலாயத்தை உற்று எடுத்த இராவணனது உடல் புகுந்து இற்றுப்போம்படிப் பொருந்திய நல்லொலிக் கழல்களபணிந்த சேவடியினிடத்துப் பற்றுதல் இல்லாதவர்க்குப் பயனே இல்லை. கு-ரை: பொற்றை - மலை. இங்கே கயிலையைக் குறித்தது. உடல் பக்குஇற - உடல் அகப்பட்டு நெரிய. நற்குரையார் கழல் - நல்ல ஓலி பொருந்திய வீரக்கழல். | திருநாவுக்கரசர் புராணம் நாளுமிகும் பணிசெய்து குறைந்தடையு நன்னாளிற் கேளுறுமன் புறவொழுகுங் கேண்மையினார் பின்பிறந்தார் கோளுறுதீ வினைமுந்தப் பரசமயங் குறித்ததற்கு மூளுமனக் கவலையினான் முற்றவருந் துயருழந்து. | | -தி.12 சேக்கிழார் | | |