பக்கம் எண் :

824திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

 

100. பொது

  பதிக வரலாறு:
       சிவபெருமான் முதன்மைத் தன்மையாம் வரலாற்றை விரித்துரைப்பதால் இப்பெயர் பெற்றது.
 

ஆதிபுராணத் திருக்குறுந்தொகை

 

ப.தொ.எண்: 213

பதிக எண்: 100

 

திருச்சிற்றம்பலம்

  2076,
வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயக னாதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.

1

  2077.
செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ
அத்த னென்றரி யோடு பிரமனும்
துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.

2

 


     1. பொ-ரை: வேதங்களுக்கு நாயகனும், வேதியர்க்கு நாயகனும், உமாதேவியின் நாயகனும், பெருந்தவம் உடைய முனிவர்களுக்கு நாயகனும், ஆதிநாயகனும், ஆதிரை என்ற விண்மீனுக்கு நாயகனும், பூதங்களுக்கு நாயகனும் புண்ணியமூர்த்தி ஆவான்.
     கு-ரை: வேதநாயகன் - வேதங்களின் தலைவன். வேதியர் - வேதம் ஓதுபவர். மாது - பார்வதி. மாதவர் - சிறந்த தவத்தைச் செய்பவர்கள். ஆதிநாயகன்- எல்லார்க்கும் முதன்மையான தலைவன். ஆதிரைநாயகன் - திருவாதிரைநட்சத்திரத்திற்குரியவன். பூதநாயகன் - பூதகணங்களுக்குத் தலைவன். இப்பாடல் தி.5 ப.73 பா.7 ஆம் பாடலோடு ஒத்திருக்கிறது.
     2.பொ-ரை: மீண்டும் மீண்டும் செத்துச் செத்துப் பிறப்பதே தெய்வமென்று பொய்யாகக் கருதிப் பக்தி செய்யும் மனப்பாறை உடையவர்கட்கு இறைவன் என்று திருமாலோடு பிரமனும் துதிசெய்யநின்ற சோதி உள்ளத்திற் பொருந்துமோ?
     கு-ரை: தே என்று - தெய்வத்தன்மையுடையது என்று. பத்தி