பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)100.பொது825

2078.
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே.
3
2079.
வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலு மேழைகாள்
யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்
மாதே வன்னலால் தேவர்மற் றில்லையே.
4

செய் - சுவர்க்கபோகங்களை அநுபவிக்க விரும்பிப் பக்தி செய்யும். மனப்பாறைகளுக்கு - பாறைபோன்ற கல் மனம் உடையவர்க்கு. ஏறுமோ - என்சொல் காதில் ஏறுமோ. அத்தன் - தலைவன். துத்தியம் செய - துதிக்க. துத்யம் - துதிக்கும்பாட்டு.
     3. பொ-ரை: நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர்; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ்வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் மட்டுமே.
     கு-ரை: நூறுகோடி ஆறுகோடி என்பன - பல என்பதற்குச் சொல்லிய எண்ணிக்கை. நொந்தினார் (நுங்கினார் என்றும் பாடம்) - அழிந்தனர். ஆறுகோடி - பல. அங்ஙனே - அவ்வாறே அழிந்தனர். ஏறு - மிக்க. இந்திரன் கங்கை மணலை எண்ணில் எத்துணையாகுமோ அத்துணையோர் இறந்தனர். ஈறு இலாதவன் - அழிவு இல்லாதவன்.
     4. பொ-ரை: அறிவற்றவர்களே! ஒருவரோடொருவர் வாதம் செய்து மயங்கும் மனத்தை உடையவர்களாய் ஏது சொல்லுவீராகிலும், யாதோர் தேவர் எனப்படுவார்க்கெல்லாம் தேவன் மகாதேவனாகிய சிவபிரான் மட்டுமன்றி வேறு யாரும் இல்லை.
     கு-ரை: வாது - சொல்வாதம். மயங்கும் - பொய்யை மெய் என்று எண்ணும். ஏது சொல்லுவீராகிலும் - பொருந்தாத மொழிகளை உண்மை போலச் சொல்லுதல் முதலான எவ்வார்த்தைகளைச் சொல்லுபவர்கள் ஆனாலும். ஏழைகாள் - அறிவற்றவர்களே. யாதோர் தேவர் எனப்படுவார்க்கெலாம் மாதேவன் அலால் தேவர் மற்றில்லையே - "யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகி