| 
 யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்" என்னும் சித்தியார் வாக்கோடு ஒப்பிட்டுணர்க.5. பொ-ரை: கிணற்றாமை கடலாமையை நோக்கி             இக்கிணற்றோடொக்குமோ கடல்? என்று கூறுதலைப்போன்று தேவதேவனாகிய             சிவபெருமானின் பெருந்தன்மையைப் பாவிகளாகிய மக்கள் பார்த்தற்கு அரிது என்பர்.
 கு-ரை: கூவல் - கிணறு. குரை - ஒலிக்கின்ற.             பாவகாரிகள் - பாவச்செயல் செய்பவர்கள். பார்ப்பரிது - இறைவனது தன்மையைக்             காணுதல் முடியாது.
 6. பொ-ரை: பேய்களோடு கூடிச் சுடுகாட்டில்             அமர்வானும், வேண்டியிருந்தவர்களுக்கு அருள்வழங்குவானும், தேவர்கள் முடிகள் திருவடிகளில்             சாய்க்கப்பெறுவானும், தமக்குடலினுள் சீவனுமாய்ச் சிவனுமாய் இருப்பவனை வஞ்சனை             உடையவர்கள் சிந்தியார்கள்.
 கு-ரை: பேய்வனம் - இடுகாடு. ஈ வன் - ஈ             பவன் என்பதன் இடைக்குறை. அடிச்சாய்வன் - அடியில் சாயப்பெற்றவன். சலவார்கள்             - வஞ்சனையுடையவர்கள். உடல் சீவன் - உடலைச் சீவன் உண்ணின்றியக்குதல் போல             அவர்களுக்குள் நின்று ஆட்கொள்ளுபவன்.
 7. பொ-ரை: வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள்;             அவ்வக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமாலுக்கும்             பிரமனுக்கும் அரிய கடவுளைக் காண்டற்கு அயர்த்து நரிவிருத்தம் ஆகுவர்.
 |