| 2805. | கந்தமா தனங்கயிலை மலைகே தாரங் | | | காளத்தி கழுக்குன்றங் கண்ணா ரண்ணா | | | மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம் | | | மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம் | | | விந்தமா மலைவேதஞ் சையம் மிக்க | | | வியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம் | | | இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும் | | | ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே. | 9 |
'நாடகம் ஆடி' என்னும் பெயரினது ஈற்று இகரம் தொகுத்தலாயிற்று. நன்கு ஆன - நன்மை பொருந்திய. கானல் - கடற்கரை. 'இடுதிரை' என்பது நீட்டலாயிற்று. சுரம், 'ஈச்சரம்' என்பதன் முதற்குறை. 9. பொ-ரை: கந்தமாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், இடமகன்ற அண்ணாமலை, தென்றல் தவழும் பொழில்களை உடைய சரிவுகளுடன் கூடிய வடபற்பதம், மகேந்திரமாமலை, நீலமலை, ஏமகூடமலை, விந்தமாமலை, வேதமலை, சையமலை, சோலைகள் மிக்க அகன்ற பொதியின் மலை. மேருமலை, உதயமலை, அத்தமலை ஆகிய இவையும் பிறவுமாகிய சந்திரனை முடியிலணிந்த சிவபெருமானுடைய மலைகளைப் புகழ்வோம். எம் இடர்கெடத் திசைநோக்கி நின்று அவற்றைப் புகழ்ந்து போற்றுவோம். கு-ரை: இத்திருத்தாண்டகம், மலையாய் உள்ள தலங்களை வகுத்து அருளிச்செய்தது; 'மலை' என்பதனை எடுத்தோதியும், ஓதாதும் அருளிச்செய்தார், அஃதின்றி நிற்கும் சொற்கள் தாமே பெரும் பான்மையும், அவற்றின் சிறப்புப் பெயராய் நிற்றலின். பற்பதம், கயிலை இவை வடநாட்டுத்தலங்கள். "வடபற்பதம்" என்றதனால், திருப்பருப்பதம் இந்திர நீலப்பருப்பதம் இரண்டுங் கொள்க. கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், அண்ணாமலை, ஏமகூடம், பொதியில் இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன. கந்தமாதனம், மகேந்திரம், நீலமலை, விந்தம், சையம், மேரு, உதயமலை, அத்தமலை இவை வைப்புத் தலங்கள். வைப்புத் தலங்களுள்,
|