பக்கம் எண் :

1061
 
2806.நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு

நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்

தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்குளமு நல்

லிடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்

விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா

கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா

கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்

குளம்களங்கா என அனைத்துங் கூறுவோமே.

10


'வேத மலை' எனவும் ஒன்று உளது போலும்! மந்தம் - மந்தானிலம்; தென்றற் காற்று. "ஏத்துவோம் ஏத்துவோம்" என அடுக்காக இயைக்க.

10. பொ-ரை: நள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நன்மை நிலவும், நாலாறு, திருஐயாறு, தெள்ளாறு, வளைகுளம், தளிக்குளம், நல்ல இடைக்குளம், திருக்குளம், அஞ்சைக்களம், குறையாத சிறப்புடைய நெடுங்களம், வேட்களம், நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, பரந்து திகழும்கோடிகா என்றெல்லாம் தேன் நிறைந்த கொன்றைப்பூ மாலை அணிந்த சிவபெருமான் விளங்கும் ஆறு, குளம், களம், கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோம்.

கு-ரை: இத்திருத்தாண்டகம், 'ஆறு,குளம், களம், கா' என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது.

நள்ளாறு, கோட்டாறு, ஐயாறு இவை மேலைத்திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன.

பழையாறு, நாலாறு, தெள்ளாறு இவை வைப்புத்தலங்கள்.

வளைகுளம், தளிக்குளம், இடைக்குளம், திருக்குளம் ஆகிய அனைத்தும் வைப்புத் தலங்கள். தளிக்குளம்- தஞ்சைத் தளிக்குளம்.

அஞ்சைக்களம், நெடுங்களம், வேட்களம்மூன்றும் மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன. நெல்லிக்கா, ஆனைக்கா, கோடிகா இவையும் மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன.

கோலக்கா, சோழநாட்டுத் தலம்.