கு-ரை: 'கங்கையை நங்கை காண' என உருபு விரித்துரைக்க. 'அருநட்டம் ஆடுங்கால் கட்டியசடை நெகிழ்தலின் அதனுள் மறைத்து வைக்கப்பட்ட கங்கையை உமையம்மை காண்கின்றாள்' என நகைச்சுவை தோன்ற அருளியவாறு. அவ்வேடம் எனச் சுட்டுவருவிக்க. வென்றியார் - வெற்றியை உடையவர். நின்றியூர், நெடுங்களம் சோழநாட்டுத் தலங்கள். மலைஆர் -மலையின் கண் நிறைந்த 'மலை ஆர் அருவி, திரள்அருவி' என்க. 'அருவியால் ஆகிய பொன்னி' என்றவாறு. இமையவரே அன்றி, உமையவள் இறைஞ்சி ஏத்துதலும் இத்திருத்தாண்டகத்துள் அருளப்பட்டது. 'மன்னினாரே' என்பதும் பாடம். திருநாவுக்கரசர் புராணம் | நல்லூரில் நம்பர்அருள் பெற்றுப்போய்ப் | பழையாறை | | பல்லூர்வெண் டலைக்கரத்தார் பயிலும்இடம் | பலபணிந்து | | சொல்லூர்வண் டமிழ்பாடி வலஞ்சுழியைத் | தொழுதேத்தி | | அல்லூர்வெண் பிறையணிந்தார் திருக்குடமூக் | கணைந்திறைஞ்சி. | -தி.12 சேக்கிழார். |
|