பக்கம் எண் :

173
 

ஆறாம் திருமுறையில் உள்ள

தலங்களின்

வரலாற்றுக் குறிப்புக்கள்

1. கோயில் (சிதம்பரம்)

கோயில் என்பது எல்லா ஆலயத்திற்கும் பொதுப்பெயர். அதுவே சிறப்புப் பெயராகக் குறிப்பிட்ட ஒரு தலத்தைக் குறிக்குமானால் அது அதனுடைய மிக்க உயர்வைக்குறிக்கும். அங்ஙனம் உயர்வுபற்றிய காரணத்தால் இத்தலம் கோயில் என்னும் பெயர் பெற்றது.

இத்தலத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள்:- (1) பெரும்பற்றப் புலியூர் - பெரும்பற்றினால் புலிப்பாதன் பூசித்த ஊராதலால் இப்பெயர் பெற்றது. இது மரூஉ மொழி. மலையமான்நாடு மலாடு என்பதுபோல.

(2) சிதம்பரம் - (சித் + அம்பரம்) சித் = அறிவு, அம்பரம் = வெட்டவெளி. ஞானகாசம் ஆதலால் இப்பெயர்பெற்றது.

(3) தில்லைவனம்:- தில்லை என்னும் மரமடர்ந்த காடாயிருந்ததால் இப்பெயர் பெற்றது. இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.

கடலூரிலிருந்து, மயிலாடுதுறை செல்லும் இருப்புப் பாதையில் இருக்கும் சிதம்பரமென்னும் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி வடமேற்கே 1.5 கி.மீ. சென்றால் இக்கோயிலை அடையலாம். இது

குறிப்பு: இத் தல வரலாற்றுக் குறிப்புக்கள், கோயம்புத்தூர், திரு. சி. எம். இராமச்சந்திர செட்டியார் அவர்களாலும், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் புலவர் திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்களாலும், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் வித்துவான் வி. சா.குருசாமி தேசிகர் அவர்களாலும் எழுதியுதவப் பெற்றன.