பக்கம் எண் :

227
 

சாத்தனூர் திருவாவடுதுறைக்குத் தெற்கே இரண்டு மைலுக்கு மேற்பட்ட தூரத்தில் இன்றும் தனியூராக விளங்கி வருகின்றது.

திருவாவடுதுறையைத் தன்னகத்துக்கொண்ட வளநாடு:

இவ்வூரைத் தன்னகத்துக்கொண்ட வளநாடு உய்யக் கொண்டார் வள நாடாகும். இந்நாடு காவிரிக்கும் அரிசிலாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பை உடையது. இது ஆக்கூர்நாடு, அம்பர்நாடு, குறும்பூர்நாடு, மருகல்நாடு, பாம்பூர்நாடு, தென்கரைத்திரைமூர்நாடு, திருநறையூர்நாடு, திருவழுந்தூர்நாடு, வெண்ணாடு, விளநாடு, பேராவூர்நாடு என்னும் பிரிவுகளை உடையதாய் இருந்தது.

திருவாவடுதுறையைத் தன்னகத்துக்கொண்ட நாடு:

திருஆவடுதுறை உய்யக்கொண்டார் வளநாட்டின் பிரிவுகளில் ஒன்றாய தென்கரைத் திரைமூர்நாட்டிற்கு உட்பட்டதாகும். நெற்குப்பை, சாத்தனூர், நடார், நல்லுச்சேரி, திருக்குரங்காடுதுறை, மகேந்திரமங்கலம் என்னும் ஊர்கள் இந்நாட்டிற்கு உட்பட்ட சில ஊர்கள் எனக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.

பிற செய்திகள்:

அர்த்தமண்டபத்தின் வடபுறச் சுவரில் அதாவது துர்க்கா பரமேசுவரியின் திருமேனிக்குக் கிழக்குப் பக்கமாக உள்ளதும், சில பகுதிகளை சுவரில் வைத்துக் கட்டப்பெற்றதும் ஆகிய கல்வெட்டில், கோப்பரகேசரிபன்மரான உடையார் காவேரிகரைகண்ட கரிகால சோழ தேவர் என்று ஒரு சோழ அரசர் குறிக்கப்பெற்றுள்ளனர். இக்கல்வெட்டின் தொடக்கத்தில் "தேவற்குயாண்டு நாலாவது தென்கரை திருவழுந்தூர் நாட்டு 'வாய் தலைப்படி குலையரையரோம்' உடையார் திருவாவடுதுறை உடையார்க்கு நாங்கள் கைதீட்டு இட்டுக் கொடுத்த பரிசாவது" எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இதில் 'வாய்


குறிப்பு: திருவாவடுதுறை ஆதீனத்தில் இருபத்தொன்றாம் பட்டத்தில் இனிது எழுந்தருளி அருளாட்சி நடத்திய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகளின் கட்டளைப்படி இக்கோயில் கல்வெட்டுக்களைப் படி எடுத்து எழுதி, அங்குக் குருபூசை விழாவில் ஆற்றிய சொற்பெருக்கின் சுருக்கமே இங்குக் கொடுக்கப் பெற்றுள்ளது.