பக்கம் எண் :

233
 

சங்கரமகா தேவர்க்கு இவ்வூரில் மடம் இருந்தது. நாற்பத் தெண்ணாயிரவர் என்னும் பெயருள்ள மற்றொரு மடமும் இருந்தது. அதில் துறவிகட்கு அன்னம் அளிக்கப்பட்டுவந்தது.

12. திருஇடைமருதூர்

மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட பாடல்பெற்ற பதிகள் மூன்றாகும். அவை வடநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனம் என்ற சீபர்ப்பதம், பாண்டிநாட்டில் உள்ள திருப்புடைமருதூர், சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூர்; ஆகும்.

இவற்றுள் சீபர்ப்பதத்துக்கும் திருப்புடைமருதூர்க்கும் இடையில் மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டிருப்பதால் இது திரு இடைமருதூர் என்னும் பெயர்பெற்றது.

மயிலாடுதுறை கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், திருவிடைமருதூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் இருக்கின்றது. மயிலாடுதுறை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஆடுதுறையை அடுத்துள்ளது இவ்வூர். பேருந்து வசதி மிகுதியும் உண்டு. இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள 30 ஆவது தலமாகும்.

இறைவரின் திருப்பெயர்: மருதவாணர், மகாலிங்கேசுவரர் இப்பதியைச்சுற்றி இருக்கும் சிவதலங்களின் அமைப்பை ஒட்டி நடேசர் சந்நிதி - தில்லையாகவும், தட்சிணாமூர்த்தி சந்நிதி - ஆலங்குடியாகவும், நவக்கிரகக் கோயில் - சூரியனார் கோயிலாகவும் விநாயகர் சந்நிதி - திருவலஞ்சுழியாகவும், முருகர் சந்நிதி - சுவாமிமலை ஆகவும், வைரவர் சந்நிதி - சீகாழியாகவும், சண்டேசுவரர் சந்நிதி - திருச் சேய்ஞலூராகவும் விளங்குகின்றன. ஆதலால், இது மகாலிங்கத் தலம் என்றும் இறைவர்க்கு மகாலிங்கேசுவரர் என்றும் திருப்பெயர்கள் ஏற்பட்டன. இறைவியாரின் திருப்பெயர்: நன்முலைநாயகி.

தீர்த்தம்: காவிரி அயிராவணத்துறை. பூசநாளில் இத்துறையில் இறைவர் தீர்த்தம் கொடுத்தருளுவர். இப்பூசநாளில் நீராடலைப்பற்றி அப்பர் பெருந்தகையார், இத்தலத்துத் திருக்குறுந்தொகையில்,

"ஈச னெம்பெரு மான்இடை மருதினில்

பூச நாம்புகு தும்புன லாடவே"