22. திருக்கழிப்பாலை சிவபுரி என வழங்கப் பெறுகிறது. இது முன்பு கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் காரைமேடு என்னும் இடத்தில் இருந்தது. அங்கு இருந்த பொழுது கொள்ளிடத்தின் வெள்ளப்பெருக்கு, திருக்கோயிலை முற்றிலும் பாழ்படுத்திவிட்டது. படுகை முதலியார் குடும்பத்தில் திரு.பழநியப்ப முதலியார் என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் கோயில்கட்டி அதில் கழிப்பாலை இறைவரையும், இறைவியாரையும், ஏனைய பரிவார தேவதைகளையும் எழுந்தருளுவித்துள்ளார். இது சிதம்பரத்திற்குத் தென்கிழக்கேசுமார் 10 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது சோழநாட்டு வடகரைத் தலங்களுள் நான்காவது. சிதம்பரத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. வான்மீகி முனிவர் பூசித்துப் பேறுஎய்தினர். இத்தலத்திற்கு ஞானசம்பந்தரது பதிகங்கள் இரண்டு, திருநாவுக்கரசரது பதிகங்கள் ஐந்து, சுந்தரரதுபதிகம் ஒன்று ஆக எட்டுத் திருப்பதிகங்கள் இருக்கின்றன. இவற்றுள் திருநாவுக்கரசர் திருவாய் மலர்ந்துள்ள "வனபவள வாய்திறந்து" என்று தொடங்கும் அகப்பெருள்துறைகள் அமைந்த பாடல்கள் படித்து இன்புறத்தக்கன. சுவாமியின்பெயர் பால்வண்ணநாதர்.தேவியின்பெயர் வேதநாயகி. கல்வெட்டு: 1இக்கோயிலில் நான்கு சோழமன்னர்களின் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. முதலாம் இராஜராஜன் ஒரு நுந்தா விளக்கு எரிக்க, திருக்கழிப்பாலை மகாதேவனுக்குப் பத்துக் காசுகள் தானம் செய்தான்.கங்கைகொண்டசோழன் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரத்துப் பணிப்பெண் ஒருத்தி இக்கோயிலுக்குப்பொன் அளித்துள்ளாள். முதலாம் இராஜராஜசோழனது கல்வெட்டின்ஒருபகுதியில் பகல்
1 இதுகாறும் ஆண்டு அறிக்கை, கல்வெட்டுத் தொகுதி இவைகளில் இக்கோயில் கல்வெட்டுக்கள் வெளிவந்தில.நேரில் படித்து எழுதியுதவின.
|