பக்கம் எண் :

270
 

செய்யப்பட்டுள்ளன1. விஜய நகர அரசன் வீரவிஜயபூபதிராயரது ஆட்சியில் அரசனுடைய அதிகாரியான நாகேசுவரமுடையான் விழாவிற்காக வரியைத் தள்ளுபடி செய்துள்ளான்2. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒல்லாந்து நாட்டு அதிகாரிகளைப் பற்றிய அடையாளச் செய்திகள் குன்றின் ஒருகால்மண்டபத்தின் கீழ்த்தாழ்வாரத்தின் 8 சுவர்களின் மேல் பொறிக்கப்பட்டுள்ளன3. இவையன்றி விளக்கு முதலானவற்றுக்குப் பொன், நிலம், ஊர், ஆடுகள், பசுக்கள் முதலியன அளிக்கப்பட்ட செய்திகளும் அறியப்படுகின்றன.

24. திருக்கற்குடி

இத்தலம் சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் மேற்றிசையில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.

இன்று உய்யக்கொண்டான் மலையென வழங்குகிறது. நந்திவர்ம பல்லவனால் திருப்பணி செய்விக்கப் பெற்றமையின் நந்திவர்ம மங்கலம் எனக் கல்வெட்டுக்கள் வழங்குகின்றன. மேற்கு நோக்கிய சந்நிதி. அம்மன் சந்நிதிகள் இரண்டு.

இறைவன் பெயர் உச்சிநாதர். முத்தீசர், கற்பகநாதர்,உச்சீவ நாத சுவாமி, உய்யக்கொண்ட நாயனார்,விழுமியார், ஆள்வார் விழுமிய தேவர், விழுமியநாயனார் எனக் கல்வெட்டுக்களிலும், புராணங்களிலும் வழங்கப் பெறுகின்றன. அம்மை, அஞ்சனாட்சி, தீர்த்தங்கள் பொன்னொளிஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண் கோணக் கிணறு, நாற்கோணக் கிணறு என்பன. மார்க்கண்டர் வழி பட்டு அருள் பெற்ற தலம்.முனிவர்கட்குக் குருமூர்த்தியாக இருந்து பெருமான்விழுமிய நூல்களை உபதேசித்த தலம். கரனும், ஈழநாட்டரசனும் வழிபட்ட தலம். தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது.

கல்வெட்டு:

இத்தலம் இராஜராஜன் காலத்து, பாண்டிய குலாசனி வளநாட்டு ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலத்துக் கற்குடிஎனவும்5, குலோத்துங்கன்


1 62 of 1909, 2 63 of 1909 ,3 66 to 73 of 1909,4 164 of 1911, 5 455of 1908.