காலத்து, இராஜமகேந்திர வளநாட்டு உறையூர்க் கூற்றத்துப் பிரமதேயமான ஷ சதுர்வேதி மங்கலத்துக் கற்குடி எனவும்1, முதல் இராஜேந்திரன் காலத்து கேரளாந்தக வளநாட்டு உறையூர்க் கூற்றத்துக் கற்குடியெனவும்2,மல்லிகார்ச்சுன மகாராஜா காலத்து இராஜகம்பீர வளநாட்டுப் பிரமதேயமான உய்யக் கொண்டான் திருமலையெனவும்3 வழங்கப் பெறுகின்றது. தருமம் ஆற்றிய மன்னர்கள் முதற்பராந்தகன், கண்டராதித்தன் மனைவி, பராந்தகன் மாதேவ அடிகளாராகிய செம்பியன் மாதேவியார், உத்தமசோழன், இராஜராஜன் I, பரகேசரிஇராஜேந்திரன் I, வீர இராஜேந்திரன், குலோத்துங்கன்I, மல்லிகார்ச்சுன மகாராஜா, மயிலைத் திண்ணன் முதலியோர், இவர்கள் அளித்தன; பெரும்பாலும் விளக்கிற்காகப் பொன்னும், ஆடும் நிவேதனத்திற்கு நிலமும் ஆம். 25. திருக்கன்றாப்பூர் நாகை மாவட்டத்தில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ் சாலைக்கு வடகிழக்கே சுமார் ஒன்பது கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது. இறைவர்: நடுதறியப்பர். இறைவி: மாதுமையம்மையார். ஊர்க்கும் இறைவர்க்கும் முறையே கன்றாப்பூர், நடுதறியப்பர் எனப் பெயர் ஏற்பட்டமைக்குக் காரணம்:சைவர் குடியில் தோன்றிய ஒரு பெண்ணை, அவரது பெற்றோர் வைணவர் ஒருவர்க்குத் திருமணஞ் செய்து கொடுத்தனர்.அப்பெண் மாமியார் வீட்டார்க்குப் புலப்படாதவாறு கன்றுக்குட்டி கட்டியிருக்கும் முளையையே சிவலிங்கமாகப் பாவித்து வழிபட்டு வந்தனர். ஒரு நாள் கணவன் அதைக்கண்டு அம்முளையைக் கோடாலியால் வெட்ட இறைவர் அம்முளையிலிருந்து வெளிப்பட்ட காரணத்தால் அவர் நடுதறியப்பர் என்னும் பெயர் எய்தினார். ஊரும் கன்றாப்பூர் என்னும் பெயர் எய்திற்று.
1 460 of 1908, 2 461of 1908, 3 474 of 1908.
|