பக்கம் எண் :

300
 

இது சுப்பிரமணியக் கவிராயரால் எழுதப்பெற்றதாகும். அச்சில் வெளி வந்துள்ளது. இத்திருக்கோயிலின் உள்துறைக்கட்டளை தருமை ஆதீன அருளாட்சியில் உளது.

கல்வெட்டு:

இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டன. (394, 395/02) 12-ஆம் நூற்றாண்டு பிற்பகுதி இராஜாதி ராஜன் 13 (கி.பி. 15-8-1173) ல் திருக்கோயில் 30 வட்டத்துக் காணி யுடைய சிவப்பிராமணர்கள் 17 பேர் உடைய நம்பியான தொண்டைமானிடம் உபயம்கொண்டு பணிசெய்ய நம்பிக் கொண் டார்கள். (முழுதுமில்லை)இதில் சிவப்பிராமணர்களின் பெயர்கள் உண்மைசொன்னான். நாற்பத்தெண்ணாயிரவர் சான்றருளிச் செய்தவற்றுள் கற்றளிப்பிள்ளை முதலிய பெயர்களின் அமைப்பை அறிக. குலோத்துங்கன்III - 17 (2-1-1195) கல்வெட்டில் சந்தியா விளக்கிற்கு நெய் அளக்க ஆடு பத்து விடப்பட்டது. இவ்விரண்டு கல்வெட்டுக்களின்படி நாடு உய்யக் கொண்டார் வளநாட்டு முழையூர் நாடு என்றும் ஊர் நள்ளாறு என்றும் இறைவன் நள்ளாறுடையார் என்றும் அறியக்கிடக்கிறது.

இராஜாதிராஜர் கல்வெட்டு "கடல்சூழ்ந்த பார்மாதரும் கலை மாதரும் அடல்சூழ்ந்த போர்மாதரும் சீர்மாதரும் அமர்ந்து வாழ" என்ற தொடக்கம் கொண்டது.

39. திருநாகேச்சுரம்

ஐந்தலை அரவால் பூசிக்கப்பெற்ற கோயிலை உடையது ஆதலின் இப்பெயர்பெற்றது. இச்செய்தி, இக்கோயிலுக்குரிய நாவுக்கரசரது திருக்குறுந்தொகையிலுள்ள(திருப்பாட்டு 4)

"ஐந்தலை யரவின் பணி கொண்டருள்

மைந்தர் போன்மணி நாகேச் சுவரரே"

என்ற தேவாரப் பகுதியால் அறியலாகும்.

மயிலாடுதுறை - கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், திருநாகேசுவரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள