பக்கம் எண் :

302
 

பல்லவராயன் 100 காசுதந்து காவேரி வெள்ளத்தினால் அழிந்த கால்வாய்களைச் செம்மைப்படுத்தினான். வட்டியில் மீதியானது கோயில் வழிபாட்டிற்கும், சிவதருமம் கூறுவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

அர்த்தநாரீசர் திருவுருவம் இங்குத் தாபிக்கப்பட்டது. கண்டராதித்தியர் இக்கோயில் திருப்பணி செய்திருக்கிறார். வேறொரு கல்வெட்டின்படி மிலாடுடையார் பள்ளியில் குமாரமார்த்தாண்டன் என்ற திருச்சுற்றாலை கட்டப்பட்டதாம். இதைப்பற்றிப் பல ஆராய்ச்சிக் கருத்துக்கள் வெளிவருகின்றன.

40. திருநாகைக்காரோணம்

நாகராசனாகிய ஆதிசேடனால் பூசிக்கப்பெற்றமையின் நாகை என்னும் பெயர்பெற்றது. புண்டரீக முனிவரைக் காயத்தோடு ஆரோகணம் செய்துகொண்டமையால் காயாரோகணம் என்னும் பெயர் எய்திற்று. அதுவே காரோணம் என்று மருவிற்று.

இது நாகப்பட்டினம் தொடர்வண்டி நிலையத்திற்கு வட மேற்கே சுமார் 2 கி. மீ. தூரத்திலிருக்கிறது. இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள எண்பத்திரண்டாவது தலம். சென்னை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை முதலிய பல நகரங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. நாகை மாவட்டத் தலைநகர்.

இறைவரின் திருப்பெயர்காயாரோகணேசுவரர். இறைவியாரின் திருப்பெயர் நீலாயதாட்சி.

தீர்த்தம் தேவதீர்த்தம். புண்டரீக தீர்த்தம், இவை முறையே கோயிலுக்குத் தெற்கிலும் வடக்கிலும் இருக்கின்றன.

அதிபத்தநாயனார் திருவவதாரஞ் செய்ததிருப்பதி. சுந்தர மூர்த்தி நாயனார் காற்றனைய வேகத்தையுடைய குதிரை, ஒளியுள்ள முத்துமாலை, சிறந்தபட்டு, முதலானவைகளை வேண்டிப் பெற்றார். விடங்கர் தலங்கள் ஏழனுள் ஒன்று.

திருக்கோயிலில் முதலில் இருக்கும் விநாயகருக்கு நாகாபரண விநாயகர் என்று பெயர். உள்ளேயிருக்கும் பிள்ளையாருக்கு மாவடிப் பிள்ளையார் எனப்பெயர். இத்தலத்து அம்மன் மிகச்சிறப்புடையவர்.இத்தலத்தைப்பற்றி "காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, நாகை நீலாயதாட்சி" என்னும் பழமொழி