பக்கம் எண் :

323
 

என (தி. 7 பதி. 35 பா. 4) அருளியுள்ளார்கள் என்பார்கள்.

இவ்வூர்ச் சிவபெருமான், மதுரை சென்று சாட்சிபகர்ந்த வரலாற்றுக் குறிப்பு, சிலப்பதிகாரத்தில்

"வன்னிமரமும் மடைப்பளியும் சான்றாக

முன்னிறுத்துக் காட்டிய மொய்குழலாள்"

எனக் குறிக்கப்பட்டுள்ளது.

இவ்வூர்க்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.

மாணிக்கவாசகர், "புறம் பயமதனில் அறம்பல அருளியும்" என இவ்வூரைப் பாடியுள்ளனர். இக்கோயில் மதுரைத் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.

கல்வெட்டு:

இந்தக் கோயிலில் 11 கல்வெட்டுக்கள்1 படி எடுக்கப்பட்டன. எல்லாம் சோழர் கல்வெட்டுக்களே. இராஜகேசரி வர்மன் முதல், குலோத்துங்கன் வரை. அதாவது (கி.பி. 10-11) நிலதானங்கள் விளக்குகளுக்காக நிலதானங்கள் விளக்குகளுக்காக நிலதானம், பொன்தானம், விளக்குத்தானம், விளக்குக்காகப் பசுதானம், ஆடு தானம் முதலியன கூறப்பெற்றுள்ளன.

இராஜகேசரிவர்மன் காலத்தில் ஆலய பண்டாரத்தில் பெற்ற மிச்சப் பொருளினால் பொன்னாபரணங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் செய்யப்பட்டன. இராஜேந்திரன் காலத்தில் திருப்புறம்பயத்து ஆதித்தேசுவரருக்கு 10 விளக்குக்களுக்காகப் பொன்தானம் செய்யப்பட்டது என்று கூறும் கல்வெட்டினால் இக்கோயிலின் மூர்த்தியின் பெயர் ஆதித்தேசுவரர் என்றும் இக்கோயிலை ஆதித்த சோழன் கட்டியிருக்கலாம் என்றும் ஊகிக்கலாம்.


1 See the Annual Reports on South Indian Epigraphy for the year 1897, No. 323-357; year 1932, No.146-151.
See also South Indian Inscriptions, Vol. VI, 18-32.
See also தமிழ்ப் பொழில்