பக்கம் எண் :

328
 

கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருப்பூவணமுடைய நாயனார் என்னும் பெயரால்குறிக்கப் பெற்று உள்ளனர். இவைகள் பொன் கொடுத்ததைஉணர்த்துகின்றன1.

54. திருமழபாடி

சேரர் கிளையினராகியமழவர் பாடி செய்து கொண்டிருந்தமையால் இப்பெயர்பெற்றது. பாடி = தங்குமிடம். பாடி எனினும் பாசறை எனினும்ஒக்கும். சிவபெருமான் மழுநிர்த்தஞ்செய்த தலமாதலால்மழுவாடி ஆயிற்று என்பர்.

இது திருவையாற்றிற்கு வடமேற்கேசுமார் 6 கி.மீ. தூரத்தில் கொள்ளிடப்பேராற்றின்வடகரையில் இருக்கின்றது. அரியலூர், திருவையாறு, திருச்சியிலிருந்துபேருந்து வசதிகள் உள்ளன. (காவிரி வடகரைத் தலங்களுள்ஒன்று).

இறைவரின் திருப்பெயர் வயிரத்தூண்நாதர்.இத்திருப்பெயரை, இவ்வூர்த் திருத்தாண்டகத்தில்அப்பர் பெருமான். "மலையடுத்த மழபாடி வயிரத்தூணே","மறைகலந்த மழபாடி வயிரத்தூணே" முதலான தொடர்களில்எடுத்து ஆண்டுள்ளனர். இதை வடமொழியில் வஜ்ரஸ்தம்பேசுவரர்என்று கூறுவர். பிரமனுலகத்திருந்த சிவலிங்கத்தைப்புருஷா மிருகம் இங்குக் கொண்டுவந்து எழுந்தருளுவித்தது.அதை மீளவும் கொண்டுபோதற்காகப், பிரமதேவர்அதைப் பெயர்த்து எடுக்க முயன்றார். அதை எடுக்கமுடியாத பிரமன் 'இது வயிரத் தூணோ' என்று வியந்தமையால்இப்பெயர் பெற்றது. இறைவியாரின் திருப்பெயர்அழகம்மை.

தீர்த்தம் கொள்ளிடப்பேராறு.

தலவிருட்சம் பனை.

இந்திரன், திருமால்இவர்கள் வழிபட்டுப் பேறு எய்தினர். திருநந்திதேவர் திருவையாற்றிலிருந்து எழுந்தருளி - சுயசை அம்மையாரை மணஞ்செய்து கொண்ட தலம். சுந்தரமூர்த்தி நாயனார்,திரு


1 See the Annual Reports on South Indian Epigraphy for the year 1894 No. 17.
See also the South Indian Inscriptions, Volume V No.305-306.