பக்கம் எண் :

334
 

செப்பனிட 1000 கூலிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் 12 கோல் நிலம் கொடுக்கப்பட்டது பற்றியும் அறிவிக்கப்பெறுகின்றன 1. மற்றைய கல்வெட்டுக்கள் விளக்கிற்கு, பிராமண உணவிற்கு, அபிடேகத்திற்குப் பொன், நிலம், பசுக்கள், குடங்கள் முதலியன கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன.

57. திருமுண்டீச்சுரம்

தென்னார்க்காடு மாவட்டத்தில் திருவெண்ணெய் நல்லூருக்குக் கிழக்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூர் இதுபொழுது கிராமம் என்று வழங்கப் பெறுகின்றது.

இறைவர்: சிவலோகநாதர்.

இறைவி: கானார் குழலியம்மையார்.

பிரமன் இந்திரன் இவர்கள் வழிபட்டுப் பேறு எய்திய தலம்.

கல்வெட்டு:

2இத்திருக்கோயிலில் சோழ மன்னர்களில் முதற்பராந்தக சோழன், இரண்டாம் ஆதித்தகரிகாலன், முதலாம் இராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலானோர் காலங்களிலும்; பாண்டியர்களில் கோனேரின்மை கொண்டானாகிய சுந்தரபாண்டிய தேவன், வீரபாண்டிய தேவன் இவர்கள் காலங்களிலும்; இராஷ்டிரகூட மன்னரில் கன்னர தேவர் காலத்திலும்; விஜயநகர மன்னரில், வீரவிருப்பண்ண உடையார் காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

கோயிலைக் கட்டியவரும்,கட்டப்பெற்ற காலமும், ஊரின் பெயரும்:

இக்கோயிலைக் கருங்கல்லால் கட்டியவர் கேரள சிற்றரசனாகிய வெள்ளாங்குமரன் ஆவர். இதை இவர் கட்டியது. முதற்பராந்தக சோழனின் முப்பத்தாறாம் இராச்சிய ஆண்டாகும். அதாவது கி. பி. 943. எனவே இக்கோயில் கட்டப்பெற்று இற்றைக்கு 1020 ஆண்டுகள்


1. 322 of 1906
See Annual Reports on South Indian Epigraphy for the year 1905 - No. 735 - 745.