பக்கம் எண் :

335
 

ஆகின்றன.

இதை உணர்த்தும் கல்வெட்டு, தமிழிலும் கிரந்தத்திலும் இருக்கின்றது. கிரந்தப்பகுதியில் இவ்வூர் மௌலி கிராமம் என்று கூறப்பெற்றுள்ளது. இரண்டாம் ஆதித்த கரிகாலன் கல்வெட்டு இக்கோயிலை, திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருமுடியூர் ஆற்றுத்தளி மகாதேவர் கோயில் என்று குறிப்பிடுகின்றது. எனது கிரந்தப் பகுதியில் உள்ள மௌலி என்பதை விட்டுவிட்டு, மக்கள் கிராமம் என்ற பெயராலே இன்றும் இவ்வூரை வழங்குகின்றனர்.

பொதுச்செய்திகள்:

கோனேரின்மை கொண்டானின் 18 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் இக்கோயில் இறைவர் ஆற்றுத்தளி மூலஸ் தானம் உடையார் பொக்கணம் கொடுத்தருளிய நாயனார் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளனர். வீரபாண்டிய தேவன், இக் கோயிலில் சுந்தரபாண்டியன் சந்தியை ஏற்படுத்தினான்.

58. திருமுதுகுன்றம்

சிவபெருமானால் முதலில் படைக்கப்பெற்றதுஆதலின் இப்பெயர் எய்திற்று. இது விருத்தாசலம், என்றும் வழங்கப்பெறும்.

இது விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி தொடர் வண்டிக் குறுக்கு வழியில் விருத்தாசலம் தொடர்வண்டி நிலையத்திற்குச் சுமார் 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. சிதம்பரத்திலிருந்தும் சேலத்திலிருந்தும் விருத்தாசலம் செல்லப் பேருந்துகள் உள்ளன. இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று.

இறைவர் திருப்பெயர் பழமலைநாதர். இறைவி திருப்பெயர் பெரியநாயகி.

தலவிருட்சம் வன்னி.

தீர்த்தம்: மணிமுத்தாறு.

திருஞானசம்பந்தப் பெருந்தகையார் இத்தலத்தை அடையும் போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித் தனிப் பதிகங்கள் பாடியருளிய பெருமையை உடையது.