பக்கம் எண் :

342
 

தேவர் காலத்தில் சயங்கொண்டசோழமண்டலத்து ஆமூர்க் கோட்டத்துச் சிறுகுன்றைநாட்டுக் காரிகைக் குளத்துளான் பெருமான் நம்பி ஆளுடையானான செயதரப்பல்லவரையன் கொடுத்துள்ளான்.

திருவலஞ்சுழியுடையார் தேவதானங்கள்:

கோப்பரகேசரி வன்மர்க்கு யாண்டு பன்னிரண்டாவதில் இன்னம்பர்நாட்டுத் தத்தங்குடி; ஒதியநத்தங்குடிப்பால் அழகத்துவப் பேறு இவ்விடங்களில் மூவேலியும், இராஜராஜதேவரின் இருபத்தொராம் ஆண்டில் இன்னம்பர்நாட்டு நாவற் குடிப்பால் நங்கையார் நிலம் மூவேலி ஆக ஆறு வேலி நிலங்கள் தேவதானமாக விடப்பட்டிருந்தன.

வெள்ளைப் பிள்ளையார்:

திருவலஞ்சுழியின் சனத்தொகை குறைந்துகொண்டேவந்தது. ஆகையால் ஊரின் நலங்கருதி வெள்ளைப் பிள்ளையார்க்கு திரிபுவனச்சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் பதினான்காம் ஆண்டில் நிலம் விடப்பட்டது. மற்றும் இப்பிள்ளையார்க்கு அளிக்கப்பெற்ற நிவந்தம் பலவாகும்.

இவ்வூரைத் தன்னகத்துக் கொண்ட நாடு:

"உய்யக்கொண்டார் வளநாட்டுப் பாம்பூர்நாட்டுத் திருக்குட மூக்கின்பால் திருவலஞ்சுழி" எனக் குறிக்கப்பெற்றிருப்பதால் இவ்வூர் உய்யக்கொண்டார்வளநாட்டுப் பாம்பூர்நாட்டுக்கு உட்பட்டிருந்தது என்பதை அறியலாம்.

பிற செய்திகள்:

முதலாம் இராஜராஜசோழன் 'சிவபாதசேகரன்' என்னும் பட்டம் பெற்றிருந்ததை இக்கோயிலிலுள்ள அவனுடைய இருபத்தொராம் ஆண்டுக் கல்வெட்டு1 உணர்த்துகிறது. முதலாம் இராஜராஜதேவர் திருமகளார் விமலாதித்ததேவர் மகாதேவியார் ஸ்ரீ குந்தவை


1 See the Annual Reports on South Indian Epigraphy for the years 1902, 1928 Numbers 618 - 634, 192 - 213.
See aslo the South Indian Inscriptions, Volume VIII Numbers 215 - 238.