பக்கம் எண் :

344
 

விக்கிரமசோழனின் ஆறாம் ஆண்டில் ஆகும்.

இவ்வூர்ச் சபையாராகிய சபையார் மும்முடிசோழன் பேரம்பலத்தில் கூட்டங்கூடி, கோயிலுக்கு வேண்டியவைகளைச் செய்துவந்தனர். இரண்டாம் இராஜாதிராஜன் காலத்தில் சயங்கொண்ட சோழமண்டலத்து மேன்மலைப் பழையனூரார் ஒருவர் இக்கோயிலில் சில படிமங்களை எழுந்தருளுவித்துள்ளார். கோயில்களுக்கு ஆட்களை விற்கும் வழக்கம் இவ்வூர்க் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளது. அம்முறைப்படி இராஜாதிராஜ வளநாட்டு, நாங்கூராகிய ஸ்ரீபாதுளி சதுர்வேதிமங்கலத்துத் தட்டானாகிய சோமன் ஆறு மனிதர்களைப் பதின்மூன்று காசுக்கு விற்றுக் கொடுத்துள்ளான். இங்ஙனமே தலைச்சங்காட்டுத் திருவலம்புரி உடையான் கலியன் குமாரனாகிய தம்பிரான் தோழன் எட்டு ஆட்களை விற்றுக்கொடுத்த செய்திகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

61. திருவலிவலம்

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். திருவாரூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது கரிக்குருவி. சூரியனும், காரணரிஷியும் பூசித்துப் பேறுபெற்றனர். சுவாமிசந்நிதி கட்டுமலைமேல் இருக்கின்றது. கோயிலைச்சுற்றிக் கிழக்குப்பக்கந்தவிர அகழி சூழ்ந்திருக்கிறது. மாடக்கோயிலுள் ஒன்று. சுந்தரமூர்த்திநாயனார், திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் 'சொல்லியவேசொல்லி ஏத்துகப்பான்' என இருவர் பாடல் சிறப்பையும் எடுத்துக் காட்டுகிறார்.

சுவாமி பெயர் மனத்துணைநாதர். அம்மை பெயர் மாழையங் கண்ணி. தலவிருட்சம் புன்னை. தீர்த்தம் காரணர் கங்கை.

கல்வெட்டு:

படியெடுத்தன ஒன்பது உள்ளன. இராஜேந்திரன் III காலத்தன மூன்று. குலோத்துங்கன் காலத்தன இரண்டு. இராஜராஜன் III காலத்தன இரண்டு. சுந்தரபாண்டியன் காலத்தன இரண்டு. இத்தலம் அருமொழித் தேவ வளநாட்டு வலிவலக் கூற்றத்து உபயகுல சுத்த சதுர்வேதி மங்கலமான வலிவலம் என்று வழங்கப்பட்டது. இறைவன்