வைத்தாற்போல் இருக்கின்றது. கல்வெட்டு: இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன. இராஜராஜன் கல்வெட்டுக்கள் ஆறு. குலோத்துங்கன் ஒன்பது. தேதியில்லா கல்வெட்டு ஒன்றும் உள்ளன. 13-10-1222 தேதியிட்ட இராஜராஜன் கல்வெட்டு நீளமானதாகும். அதன்படி, நாடு சுத்தமலிவளநாடு, உள்நாடு வெண்ணி கூற்றம், ஊர் வெண்ணிநகரம், இறைவன் திருவெண்ணி உடையார் என அறிகிறோம். அந்த இறைவனுக்கு நித்த வினோத வளநாட்டு வீரசோழ வளநாட்டுப் புத்தூரான திருபுவனச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் திருநாமத்துக் காணியாக விட்ட நிலத்தின் எல்லை கூறப்படுகிறது. அந்நிலத்தில் விளைகிற பொருள்களின் அளக்கும் அளவும் கொடுக்கப்பட்டுள்ளது. இனி, குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் "புனல்வாய்த்து" என்ற தொடக்கம் கொண்டவைகள். கோயிலுக்கு நிலங்கொடுக்கப் பட்ட விவரங்கள் அவைகளில் காணப்படுகின்றன. சுற்று வட்டத்து ஊர்களின் பெயர்களும் ஆட்களின் பெயர்களும் அவைகளில் எழுதப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று 2-7-1196ஆம் தேதியுடையது. ஆகவே கி.பி. 12ஆவது நூற்றாண்டின் முற்பகுதியும் இக்கோயில் சிறந்திருந்த காலமாகும். திருத்தல யாத்திரை | | மூர்த்திதலம் தீர்த்தம முறையாய்த் தொடங்கினர்க்கோர் | வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே | -தாயுமானவர். | | நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் | தேடித் திரிந்து சிவபெரு மான்என்று | பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் | கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே. | -திருமூலர். |
|