பக்கம் எண் :

365
 
2088.கருமானின் உரியதளே உடையா வீக்கிக்

கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி

வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட

வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி

அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண

அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற

பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

3


2089.அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை

அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா

மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை

மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்

திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்

திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய

பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

4


3. பொ-ரை: யானைத் தோலை மேலாடையாக இறுக்கி உடுத்து, தன் கழல்களின் ஒலி ஏனைய இயங்களின் ஒலியோடு கலந்து ஒலிக்க, கையில் தீயை ஏந்தி, பெருமை வளர்கின்ற பருத்த தோள்களை மடித்து அவைகள் அசையுமாறு, பிறைமதியைச் சடையில் அணிந்து மானின் பார்வை போன்ற பார்வையளாகிய மேம்பட்ட சிறந்த ஒளியை உடைய முகத்தவளாகிய உமாதேவி விரும்பிக்காணுமாறும் தேவர் கூட்டம் தலை தாழ்த்து வணங்குமாறும் திருக்கூத்தாடுகின்ற மேம்பட்டவனாகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

கு-ரை: இத்திருத்தாண்டகம், இறைவரது ஆடற் சிறப்பின்கண் ஈடுபட்டருளிச் செய்தது. கருமான் - யானை. 'வருதோள்' எனவும், 'அருமுகம்' எனவும் இயையும். மானம் - பெருமை. 'மடித்து' என்பது. 'மட்டித்து' என விரிக்கப்பட்டது. வீக்கி - கட்டி.

4. பொ-ரை: பெருந்தவத்தோர் தொழுது போற்றும் தலைவன், தேவர்கள் தலைவன், தீமைகளை அழிப்பவன், மூப்பு எய்தாமற்