| குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக் | | | கூத்தாட வல்லானைக் கோனை ஞானம் | | | பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் | | | பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | 9 |
| 2095. | காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங் | | | கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம் | | | சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் | | | திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் | | | ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும் | | | ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற | | | பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் | | | சோத நாளெல்லாம் பிறவா நாளே. | 10 |
திருச்சிற்றம்பலம்
அழித்தவன். விளங்கும் ஒளிவடிவினன். இடப்பாகத்தது நிறத்தால் மரகதமணி போன்றவன். இன்பம்பயத்தலால் தேனும் பாலும் போன்றவன். குற்றாலம் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இளையவன். கூத்தாடுதலில் வல்லவன். யாவருக்கும் தலைவன். சிவஞானியர் ஞானத்தால் அறியப் பெற்றவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. கு-ரை: பால் மதி - பால்போலும் (களங்கமில்லாத) மதி; 'பகுப்பாய மதி' எனலுமாம். செற்றார்கள் - பகைத்தவர்கள். செற்றான் - அழித்தான். மரகதம் - மரகதம்போல்பவன். 'திகழொளியை, தேனை, பாலை' என்பதனை மேலே (தாண் - 1) காண்க. குற்றாலம், பாண்டி நாட்டுத் தலங்களுள் ஒன்று. "கூத்தாட வல்லானை" என்றருளிச்செய்தது, எல்லா வகை ஆடலும் புரிதல் கருதி. காளியொடு ஆடினமையையும் கருதுக. 'ஞானம் பெற்றான்' என்றதும், பான்மை வழக்கு. 'பெற்றார்கள்' என்பதும் பாடம். 10. பொ-ரை: கரிய உடல் ஒளியை உடையவனும் சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலும், நறுமணம் கமழும் செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் தன் அடியையும் முடியையும் காணமுடியாதபடி சீரிய ஒளியை உடைய தீப்பிழம்பாய் நின்ற பழைய
|