தூயவெண் ணீறு துதைந்தபொன் மேனியும் தாழ்வடமும் | நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்துருகிப் | பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச்செஞ்சொல் | மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே | - தி.12 திருநாவு. புரா. 140 |
இறைவன் 'பொருள்சேர் புகழ்' விரிக்கும் செந்தமிழ் அமுதத் திருப்பாடலை ஓதிக்கொண்டேயிருக்கும் ஒட்பம் தோன்றப் 'பதிகச் செஞ்சொல் மேய செவ்வாய்' என்றருளிய திறம் இனிது உணரத்தக்கது. தொடையறாச்செவ்வாய்: சிவஞான சுவாமிகளும் அப்பரடிகள் அழகுருவத்தைத் தமிழாற் சிறப்பித்துள்ளனர். அதனுள் 'ஞானப்பாடல் தொடையறாச் செவ்வாய்' என்று இப்பெருமானாருடைய பாவன்மை தோன்றப் பாடியருளியுள்ளனர்; அவ்வருந் தமிழ்ப்பாடல் பின்வருவதாகும். | இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும் | உழவா ரத்திண் | | படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே | பதித்த நெஞ்சும் | | நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன் | ஞானப் பாடல் | | தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும் | துதித்து வாழ்வாம். | (காஞ்சிப்புராணம். பா.13) |
திருவாரூர்ப் புராணமுடையார், "சாலமிகு பாவமுது வேனில் வெம்மைத் தழலாற | ஆகமநூற் றருமஞ்சான்ற | சீலநிறை சைவநெறி நிழல்பரப்பும் திருநாவுக்கரசு" |
என்று புகழ்தல் இங்கு ஒப்பிட்டுணர்தற்குரியது. "தேவரசு மனமகிழத் திருப்பதிகம் இசைத்தமிழிற் | சிறக்கப்பாடும் நாவரசு" |
என்று புகழ்வர் சிவராத்திரிபுராண ஆசிரியர்.
|