பக்கம் எண் :

1
 


குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம்
26 ஆவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய

ஆசியுரை

திருச்சிற்றம்பலம்

ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்தோள்தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருளதே.

- தி. 7 ப. 45 பா. 4

நாலுபேர் போன வழி :

"நாலுபேர் போனவழியில் போ" என்பது நமது நாட்டுப் பழமொழி. நாலுபேராவார் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயாசாரியர் நால்வருமாவர். இவர்கள் சென்றவழி சைவ சமய நெறியாகும். சைவமும் வைணவமும் ஒன்றாயிருந்த காலத்தில் சைவத்தைச் சமயம் என்றே வழங்கிவந்தனர். சமயம் என்றாலே முற்காலத்தில் சைவத்தையே குறித்தது.

சமயாசாரியர் :

இதுபற்றியே நம் சைவசமய ஆசாரியர்களைச் சமயாசாரியர் என்றே இன்றும் வழங்கி வருகின்றனர். மேலும் எல்லாச் சமயக் கருத்துக்களையும் படிமுறையாகத் தன்னகத்தே கொண்டுள்ளமையால் எல்லாச் சமயங்கட்கும் தாய்ச் சமயம் என்ற கருத்திலும் இப்படி வழங்கி வந்துள்ளனர்.

சைவத்தின் சிறப்பு :

வினை என்பது செயலைக் குறிக்கும். செயல் உண்டு என்றால்