செய்பவன் ஒருவன் இருக்க வேண்டும். செயலும், செய்பவனும் உண்டு எனில் அவன் செய்த செயலுக்குப் பயன் ஒன்று இருக்க வேண்டும். செய்வினை, செய்வான் அதன் பயன் உண்டு என்றால் அப்பயனைச் செய்தவனிடம் சேர்ப்பிக்கும் ஒருவனும் வேண்டும். அவனே இறைவன். இந்நான்கு பொருளும் ஒருங்குகொண்டதே உண்மைச் சமயமாகும். இந்நான்கும் சைவநெறி அல்லவற்றிற்கு இல்லை என்பதை உணர்ந்தவர் சாக்கிய நாயனார். இவர் பௌத்த சமயத்தின் பிரிவாகிய சாக்கிய மதத்தைச் சேர்ந்திருந்து இவ்வுண்மையை உணர்ந்த பின்னர்ச் சாக்கிய வேடத்தைத் துறவாதே சைவநெறியைக் கடைப்பிடித்தவர். வேற்றுச் சமயத்தைச் சேர்ந்த இவர் மதிப்பீடு இதுஎனில் சைவத்தின் பெருமையை நாம் சொல்லவும் வேண்டுமோ? இதனைச் சேக்கிழார் காட்டும் அப்பாடல் காண்க. செய்வினையும் செய்வானும் | அதன்பயனும் சேர்ப்பானும் | மெய்வகையால் நான்காகும் | விதித்தபொருள் எனக்கொண்டே | இவ்வியல்பு சைவநெறி | அல்லவற்றுக் கில்லையென | உய்வகையால் "பொருள் சிவன்" என்(று) | அருளாலே உணர்ந்தறிந்தார்." | தி. 12 சாக்கிய. புரா. 5 |
மேலும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் களப்பிரர் ஆண்டகாலம் இருண்டகாலமாய் இருந்தது. அதன் பின்னர் ஒருவர்பின் ஒருவராகத் தோன்றிச் சமண பௌத்த சமயங்களை அடக்கிச் சைவ ஒளி பரப்பிய சமய சஞ்சீவீகளாக அமைந்தமையால் இவர்களை, சமயாசாரியர்கள் என வழங்கி வருகின்றனர் என்பதும் பொருந்துவதே. நான்கு நெறி : இவர்கள் காட்டிய வழி - அஃதாவது நெறி, சிவநெறி சைவநெறி. இந்நெறி மக்களை நான்கு நிலையினராக அவரவர் தகுதிக்கேற்ப பிரிக்கிறது. 1. சரியை நெறி - உடல் முக்கால் பகுதியும், உணர்வு கால்பகுதியும் கொண்ட உடல் தொண்டு. 2. கிரியை நெறி -
|