| கனிகள் பலவுடைச் சோலைக் | | காய்க்குலை ஈன்ற கமுகின் | | இனியன் இருப்பதும் ஆரூர் அவர் | | எம்மையும் ஆள்வரோ கேளீர். | | 2 |
742. | சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன் | | தொடர்ந்தவர்க் குந்துணை யல்லேன் | | கல்லில் வலிய மனத்தேன் | | கற்ற பெரும்புல வாணர் | | அல்லல் பெரிதும் அறுப்பான் | | அருமறை ஆறங்கம் ஓதும் | | எல்லை இருப்பதும் ஆரூர் அவர் | | எம்மையும் ஆள்வரோ கேளீர். | | 3 |
வெறுப்பேன்; மனத்தோடன்றி முகத்தான் மட்டும் இனிய பல சொற்களைச் சொல்லேன்; அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும், கனிகள் பலவற்றையுடைய சோலையின்கண் காயையுடைய குலைகளை ஈன்ற கமுக மரங்களையுடைய திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின். கு-ரை: 'தம்மை' என்பது பாடம் அன்று. 'முகத்தானே' என உருபும், பிரிநிலை ஏகாரமும் விரிக்க. "பேசி மொழியேன்" என்றன, ஒரு பொருட் சொற்கள். 'பேசி யொழியேன்' என்பதே பாடம் போலும்! எள்குதல் முதலியவற்றிற்குச் செயப்படு பொருளாகிய 'அவனை' என்பதை முதற்கண் வருவித்து, செய்யுளாகலின், சுட்டுப்பெயர் முன் வந்தவாறாகக் கொள்க. "இனியன் இருப்பதும்" என்றதனை, "கனிகள்" என்றதற்கு முன்னே கூட்டியுரைக்க. இது முதலாக வரும் திருப்பாடல்கள், முதற்கண் தம் நிலையை மொழிந்து, பின், 'இப் பெற்றியேமாகிய எம்மை ஆள்வாரோ' என வினவியவாறாம். 3. பொ-ரை: தொண்டீர், யான் யாதேனும் ஒன்று சொல்வதாயின், எனது பெருமையை யன்றி வேறொன்றைச் சொல்லேன். அயலவர்க்கேயன்றி, உறவினர்க்கும் உதவுவேனல்லேன்; அத்துணைக் கல்லினும் வலிய மனத்தை யுடையேன். கல்வியை நிரம்பக் கற்ற பெரிய புலமை வாழ்க்கை உடையவர்களது துன்பத்தைப் பெரிதும் நீக்குகின்றவனும், அரிய வேதங்களும், ஆறு அங்கங்களும்
|