பக்கம் எண் :

1135
 
837.மலந்தாங்கிய பாசப்பிறப்

பறுப்பீர்துறைக் கங்கைச்

சலந்தாங்கிய முடியான்அமர்ந்

திடமாந்திருச் சுழியல்

நிலந்தாங்கிய மலராற்கொழும்

புகையால்நினைந் தேத்தும்

தலந்தாங்கிய புகழான்மிகு

தவமாம்சது ராமே.

6

838.சைவத்தசெவ் வுருவன்திரு

நீற்றன்னுரு மேற்றன்

கைவைத்தொரு சிலையால்அரண்

மூன்றும்மெரி செய்தான்


6. பொ-ரை: மாசினை உடைய பாசத்தால் வருகின்ற பிறப்பினை அறுக்க விரும்புகின்றவர்களே, துறைகளை உடையதாதற்கு உரிய கங்கையாகிய நீரினைத் தாங்கியுள்ள முடியையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடமாகிய திருச்சுழியலை, நிலம் சுமந்து நிற்கின்ற மலர்களாலும், செழுமையான நறும்புகைகளாலும் வழிபட்டு, நினைந்து துதிமின்கள்; உமக்கு இவ்வுலகம் சுமக்கத்தக்க புகழோடு கூடிய மிக்க தவம் உளதாகும் திறல் உளதாகும்.

கு-ரை: "மலந் தாங்கிய பாசம்" என்றது, ஆணவத்தை. மாசாவது, அறிவை மூடுதல். அதனால் அஃது 'இருள்' என்னும் பெயரைப் பெற்றது. அது காரணமாக வினையும், வினை காரணமாக உடம்பும் வருதலின், 'மலந்தாங்கிய பாசப் பிறப்பு' என்று அருளினார். 'அமர்ந்த' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மலரை, 'நிலம் சுமந்தது' என்றார். அதனாற் கொள்ளப்படும் பயன், சிவபிரானுக்கு அணிவித்தலே என்றற்கு. "புகையால்" என்பதன் பின், 'வழிபட்டு' என்பது வருவிக்க. முப்பொறிகளாலும் தொண்டுபடுதலை அருளியவாறு காண்க. "தலம் தாங்கி புகழ்" என்றது, 'அதனால் எளிதிற் சுமக்கலாகாத மிகுபுகழ்' என்றதாம். "புகழான்" என்ற ஆனுருபு, உடனிகழ்ச்சிக்கண் வந்தது. 'புகழாம்' என்பதும் பாடம்.

7. பொ-ரை: சிவாகமங்களிற் சொல்லப்பட்ட வேடத்தையுடைய சிவந்த திருமேனியை யுடையவனாய்த் திருநீற்றை யணிபவனும்,