பக்கம் எண் :

1053
 
743.நெறியும் அறிவுஞ் செறிவும்

நீதியும் நான்மிகப் பொல்லேன்

மிறையுந் தறியும் உகப்பன்

வேண்டிற்றுச் செய்து திரிவேன்

பிறையும் அரவும் புனலும்

பிறங்கிய செஞ்சடை வைத்த

இறைவன் இருப்பதும் ஆரூர் அவர்

எம்மையும் ஆள்வரோ கேளீர்.

4



சொல்லும் முடிந்த பொருளானவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.

கு-ரை: குலாவுதல், விளங்குதலாதலின், குலா, புகழாயிற்று. அநுபவத்தானே, துன்பம் பற்றறக் கழியுமாகலின், கற்றவர்களுக்குத் 'துன்பத்தைப் பெரிதும் நீக்குவான்' என்று அருளினார். "எல்லை" என்றதில் ஐகாரத்தைச் சாரியை யாக்கி, 'எல் - ஒளி' என்பாரும் உளர். மேல் இரண்டு திருப்பாடல்களில் தமது தகுதியைப் புலப்படுத்து வேண்டினவர், இத் திருப்பாடலுள் தகுதியின்மையைப் புலப்படுத்து வேண்டினார்; ஆதலின், "எம்மையும்" என்ற உம்மை இங்கு இழிவு சிறப்பாம். ஆகவே, பன்மையும் இழிபுணர்த்திற்றாம். இவ்வாறே இவ்வும்மை, எச்சமாயும், இழிவு சிறப்பாயும் வருதலை அவ்வவ்விடத்து ஏற்ற பெற்றியாற்கொள்க. இங்கு, "எம்மை" என்றது, ஒருமை பன்மை மயக்கம். தகுதியுடைமை கூறி, அதுபற்றி அருளல் வேண்டும் என வேண்டுதலும், தகுதி இன்மை கூறி, அவ்வாறாயினும் நின் கருணையால் எமக்கு இரங்கியருளல் வேண்டும் என்று வேண்டுதலும் ஆகிய இரண்டும், இறைவனிடத்தில் அடியார் செய்வனவே யாகலின், அவ்விருவகையும் இத்திருப்பதிகத்துள் விரவி வருவன என்க.

4. பொ-ரை: தொண்டீர், யான், ஒழுகும் நெறியிலும், பொருள்களை அறிகின்ற அறிவிலும், பிறரோடு இணங்குகின்ற இணக்கத்திலும், சொல்லுகின்ற நீதியிலும்; மிக்கபொல்லாங்குடையேன்; பிறரை வருத்துதலையும், பிரித்தலையும் விரும்புவேன்; மற்றும் மனம் வேண்டியதனைச் செய்து திரிவேன்; பிறையையும், பாம்பையும், நீரையும் தனது விளக்கமான சிவந்த சடைமேல் வைத்துள்ள இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திரு