பக்கம் எண் :

1092
 
மலைக்கொள் அருவி பலவாரி

மணியும் முத்தும் பொன்னுங்கொண்

டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகேளோ!

7

788.போழும் மதியும் புனக்கொன்றை

புனல்சேர் சென்னிப் புண்ணியா

சூழும் அரவச் சுடர்ச்சோதீ

உன்னைத் தொழுவார் துயர்போக

வாழும் அவர்கள் அங்கங்கே

வைத்த சிந்தை உய்த்தாட்ட

ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகேளோ!

8



உடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், இறைவனாவான் நீயே; ஓலம்!

கு-ரை: ''ஒருபாலாய்'' என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. 'ஒருபாலா' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். ''மலைக்கொள்'' என்றதில், கொள்ளுதல், 'பெருகுதல்' என்னும் பொருளது. ''தீர்த்தன் நீ'' என்றது, 'நீயே இறைவனாக, நினக்குமேல் இறைவர் இலராகலின், யாவும் செய்வாய்' என்று கூறி, வேண்டியவாறு.

8. பொ-ரை: பகுக்கப்பட்ட சந்திரனும், புனங்களில் உள்ள கொன்றை மலரும், நீரும் பொருந்திய முடியையுடைய புண்ணிய வடிவினனே, சுற்றி ஊர்கின்ற பாம்பை அணிந்த, சுடர்களையுடைய ஒளி வடிவினனே, உன்னை வணங்குகின்றவர்களது துன்பம் நீங்குமாறும், ஆங்காங்கு வாழ்கின்றவர்கள் விருப்பத்தினால் வைத்த உள்ளங்கள் அவர்களைச் செலுத்தி மூழ்குவிக்குமாறும், மறித்து வீசுகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், ஓலம்!

கு-ரை: 'சிவபிரானது அடியவர்கள் அவனது அருள்வடிவாகக் கொண்டு முழுகித் துன்பம் நீங்குமாறும், மற்றும் ஆங்காங்கு