பக்கம் எண் :

1091
 
786.கார்க்கொள் கொன்றை சடைமேலொன்

றுடையாய் விடையாய் கையினான்

மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய்

முன்நீ பின்நீ முதல்வன்நீ

வார்கொள் அருவி பலவாரி

மணியும் முத்தும் பொன்னுங்கொண்

டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகேளோ!

6

787.மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப்

பற்றி உலகம் பலிதேர்வாய்

சிலைக்கொள் கணையால் எயில்எய்த

செங்கண் விடையாய் தீர்த்தன்நீ



6. பொ-ரை: கார்காலத்தைக் கொண்ட கொன்றைமலரின் மாலை யொன்றைச் சடைமேல் உடையவனே, விடையை ஏறுபவனே, அறிவில்லாதவரது ஊர்கள் மூன்றைச் சிரிப்பினால் எரித்தவனே, ஒழுகுதலைக்கொண்ட பல அருவிகள் வாரிக் கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக்களையும் கைக்கொண்டு ஆரவாரிக்கின்ற அலைகளையுடைய, காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், எல்லாவற்றுக்கும் முன்னுள்ளவனும் நீயே; பின்னுள்ளவனும் நீயே; எப்பொருட்கும் முதல்வனும் நீயே; ஓலம்!

கு-ரை: "கார்க் கொள், வார்க்கொள்" என்றவற்றில், எதுகை நோக்கி, ககரம்மிகுந்தது. "முன்நீபின்நீ முதல்வன்நீ" என்றது, 'எல்லாவற்றையும் ஆக்குபவனும் நீ அழிப்பவனும் நீ; ஆதலால், நீ, யாம் அங்கு வருதற்குரிய வழியைச் செய்யவல்லாய்"; அவ்வாறு செய்ய ஒட்டாது தடுப்பவரும் இல்லை என்றவாறு. நகையை, "கை" என்றது, முதற்குறை. 'வாரிய' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.

7. பொ-ரை: மலையிடத்துத் தோன்றிய மங்கையை ஒரு பாகத்திற் கொண்டு, உலக முழுவதும் பிச்சைக்குத் திரிபவனே, வில்லிடத்துக் கொண்ட அம்பினால் முப்புரத்தை அழித்த, சிவந்த கண்களையுடைய இடபத்தை யுடையவனே, மலையிடத்துப் பெருகிய பல அருவிகள் வாரிக்கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக்களையும் கைக்கொண்டு இருபக்கங்களையும் அரிக்கின்ற அலைகளை