785. | பிழைத்த பிழையொன் றறியேன்நான் | | பிழையைத் தீரப் பணியாயே | | மழைக்கண் நல்லார் குடைந்தாட | | மலையும் நிலனுங் கொள்ளாமைக் | | கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங் | | கழனி மண்டிக் கையேறி | | அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் | | தையா றுடைய அடிகேளோ! | | 5 |
அதனால்பெற்ற பயன் ஒன்றையும் யான் அறிகின்றிலேன் ; ஓலம்! கு-ரை: 'உமக்குப் பணிசெய்வோர் பயன் கருதாதே செய்வர்; யானும் அவ்வாறே செய்கின்றேன்' என்றபடி. "ஏகபடம்" என்றது, வடநூல் முடிபு. 'ஒன்ற' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. 'ஒற்றை ஆடை' என்று, அதுதானும், தோலாதலை உட்கொண்டு, இனி, மோனை நயமும், பிறவும் நோக்காது 'வேக படம் ஒன்று' என்றே பிரித்து, 'சினம் பொருந்திய பாம்பு ஒன்றை என்று உரைப்பாரும் உளர். "சாத்தி" என்றதனை, 'சாத்த' எனத் திரிக்க. 'சாத்தின்' எனவும், 'குழகார் வாழை' எனவும் பாடம் ஓதுதல் சிறக்கும். 'வாழைக் குலைத் தெங்கு' எனத் தகரம் மிகுத்து ஓதுதல் பாடம் அன்று. 5. பொ-ரை: மழைபோலும் கண்களையுடைய அழகியராகிய மகளிர் நீரில் மூழ்கி விளையாட, மலையும் நிலமும் இடம் கொள்ளாதபடி பெருகி, மூங்கிலிடத்துப் பொருந்திய தேன் பொருந்தப்பெற்று, வயல்களில் எல்லாம் நிறைந்து, வரம்புகளின் மேல் ஏறி ஒலிக்கின்ற அலைகளையுடைய, காவிரி யாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாகிய உடைய அடிகேள், அடியேன் உமக்குச் செய்த குற்றம் ஒன்று உளதாக அறிந்திலேன்; யான் அறியாதவாறு நிகழ்ந்த பிழை உளதாயின், அது நீங்க அருள்செய்; ஓலம்! கு-ரை: தாம் விரும்பியவாறே சென்று வணங்கல் இயலாதவாறு காவிரியில் நீர்ப்பெருக்கை இறைவர் நிகழ்வித்தார் என்று கருதி இவ்வாறு வேண்டினார். "ஆட" என்றது. நிகழ்காலத்தின்கண் வந்தது. "கொள்ளாமை" என்றதன்பின், 'பெருகி' என ஒருசொல் வருவிக்க. 'கழனி எங்கும் மண்டி' என மாற்றியுரைக்க. அழைத்தல் - ஒலித்தல்.
|