பக்கம் எண் :

1089
 
குருவி யோப்பிக் கிளிகடிவார்

குழல்மேல் மாலை கொண்டோட்டம்

தரவந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகேளோ!

3

784.பழகா நின்று பணிசெய்வார்

பெற்ற பயனொன் றறிகிலேன்

இகழா துமக்காட் பட்டோர்க்கு

வேக படமொன் றரைச்சாத்திக்

குழகா வாழைக் குலைதெங்கு

கொணர்ந்து கரைமேல் எறியவே

அழகார் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகேளோ!

4


உமதாக உடைய அடிகேள், யான், சிலர்போல, உறுவது சீர் தூக்கி, உற்ற வழிக்கூடி, உறாதவழிப் பிரியமாட்டேன் ; என்றும் உம் வழியிலே நின்று விட்டேன் ; இனி ஒருகாலும் இந்நிலையினின்றும் நீங்கேன் ; ஓலம் !

கு-ரை : பயன் கருதி நட்புச் செய்வாரது இழிபினை,

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரும் நேர்

-குறள்-813

என்பதனான் அறிக. நின்றொழிந்தேன் யு என்று, ஒருசொல்லாய், துணிவுப் பொருண்மை உணர்த்திற்று. ஒழிகிலேன் யு என எதிர்மறை முகத்தானும் அருளினார், நன்கு வலியுறுத்தற்கு. 'விச்சிய' என்றதன் ஈறு தொகுத்தலாயிற்று. விச்சுதல் - வித்துதல் ; இதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.

4. பொ-ரை: வாழைக் குலைகளையும், தென்னங் குலைகளையும் அழகாகக் கொணர்ந்து கரைமேல் எறிதலால் அழகு நிறைந்துள்ள அலைகளையுடைய, காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், உமக்கு அடிமைப்பட்டவர் முன்னே, நீர் ஒற்றை ஆடையையே அரையில் பொருந்த உடுத்து நிற்றலால், உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்பவர்,