| கங்கை சடைமேற் கரந்தானே | | கலைமான் மறியுங் கனல்மழுவும் | | தங்குந் திரைக்கா விரிக்கோட்டத் | | தையா றுடைய அடிகேளோ! | | 2 |
783. | மருவிப் பிரிய மாட்டேன் நான் | | வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன் | | பருவி விச்சி மலைச்சாரற் | | பட்டை கொண்டு பகடாடிக் |
யாற்றை உமதாக உடைய அடிகேள் ஓலம்! கு-ரை: 'சடைமேற் கங்கை' என மாற்றி, உம்மை விரித்து உரைக்க. "கரந்தானே" என்றதில், தானும் ஏயும் அசைநிலைகள். இவ்வாறன்றி, 'மறைத்தவனே' என்று உரைப்பின், இயையாமை அறிக. "மழுவும்" என்றதன்பின்னும் ஆக்கம் வருவிக்க. தலைநாள் கடைநாள் ஒத்தலாவது, முதல்நாள் எழுந்த விருப்பம், எந்நாளும் மாறாது நிற்றல்.
"ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம் | பலநாட் பயின்று பலரொடு செல்லினும் | தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ" | - புறம் - 101 |
எனப் பிறரும் பிறிதோரிடத்துக் கூறினார். "எங்கே போவேனாயிடினும்" என்றது, தாம் மறந்து செல்லுதலையும், "அங்கே வந்து என் மனத்தீராய்த் தங்கும்" என்றது, அவ்விடத்துத் தம்மை இறைவர் நினைப்பித்தலையும் குறித்து. "இத் தன்மையீராகிய நீர், உம்மை நினைந்து நிற்கும் நினைவை முடியாதொழியீர் என்று ஓலமிடுகின்றேன்' என்றபடி. 3. பொ-ரை: நீர், பரந்து பெருகி தினை விதைக்கப்பட்ட மலைச்சாரலில் பல பிரிவுகளாய்க் காணப்பட்டு, யானைகளைப் புரட்டி, புனங்களில் குருவிகளையும் கிளிகளையும் ஓட்டித் தினையைக் காக்கும் மகளிரது கூந்தல்மேல் அணிந்த மாலைகளை ஈர்த்துக் கொண்டு ஓடுதலைச் செய்தலால் அழகிய அலைகளை உடைத்தாய் நிற்கும், காவிரிக் கரைக்கண் உள்ள திருவையாற்றை
|