782. | எங்கே போவே னாயிடினும் | | அங்கே வந்தென் மனத்தீராய்ச் | | சங்கை யொன்று மின்றியே | | தலைநாள் கடைநா ளொக்கவே |
கு-ரை: "நம்மைச் சொற்றமிழ் பாடுக" என்றும் (தி. 12 தடுத். புரா. 70.). "இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு" என்றும் (தி. 12 தடுத். புரா. 76.). "ஆரூரில் வருக நம்பால்" என்றும் (தி. 12 தடுத். புரா. 108). "மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ" என்றும் (தி. 12 ஏ. கோ. புரா. 72.). "கூடலை யாற்றூர் ஏறச் சென்றது இவ்வழிதான்" என்றும் (தி. 12 ஏ. கோ. புரா. 102.) பலவாறு நீர் பாடுவிக்கவே ஆங்காங்கும் வந்து பாடினேன் என்பார், "பரவும் பரிசொன்றறியேன்" என்றும், 'என்னையே துணையாகப் பற்றி நிற்கும் சேரமான் பெருமாளை வேறோராற்றால் முன்பே உம்மை வழிபடு வியாது ஒழிந்தேன்' என்பார் "பண்டே உம்மைப் பயிலாதேன்" என்றும், "எய்த நினையமாட்டேன்" என்றும் அருளிச் செய்தார். முன்பு தாம் தனித்துச் சென்று வழிபட்டாராகலின், (தி. 12 ஏ. கோ. புரா. 71.) சேரமான் பெருமாளோடு மீளச் செல்லாமையை, "பயிலாதேன்" என்றார் என்க. கரவின்மை, பொய்யாமை. அருவியால் ஆயது, 'அருவி' எனப்பட்டது. "உண்ண" என்ற குறிப்பால், "கமுகு" என்றது, அதன் குலையையாயிற்று. கமுகங் குலை உண்ணப்பட்டது போல, தென்னங்குலை உண்ணப்பட்டிலது என்றற்கு, "தெங்கங் குலைக்கீழ்" என்று அருளினார். 'அரவத் திரை' என்பது மெலிந்து நின்றது. 'திரைக் கோடு' என இயையும், திரையை எடுத்தோதினமையால், அதற்கு இவ்வாறு உரைத்தலே திருவுள்ளமாதல் அறிக. ஒற்றிரட்டிய, 'கோடு' என்னும் குற்றியலுகரம் அத்துப்பெற்றது, 'வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான்' என்றல்போல. ஓலமிடுவாரைத் தாங்குவார் கொடுக்கும் எதிர்மொழியும், 'ஓலம்' என்பதேயாகலின் இத் திருப்பதிகத்தைக் கேட்டருளிய இறைவனும், "ஓலம்" என்றான் என்க. ஓகாரம், முறையீட்டின்கண் வந்ததாகலின், அதற்கு இவ்வாறு பொருள் கொள்ளப்படும். அதனால், ஈண்டும், திருத்தொண்டர் புராணத்தும், 'அடிகளோ' என ஓதும் பாடம் சிறவாமையறிக. சீர் நிலைகளும் அன்னவாதல் நோக்குக. 2. பொ-ரை: அடியேன் எங்கே செல்வேனாயினும், முதல் நாளும் இறுதி நாளும் ஒரு பெற்றியவாக, சிறிதும் ஐயம் இன்றி, அங்கே வந்து என் மனத்தில் இருப்பீராய், சடைமேற் கங்கையும், கையில் மானின் ஆண் கன்றும், சுடுகின்ற மழுவுமாய்த் தங்குகின்ற, அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக் கண் உள்ள திருவை
|