பக்கம் எண் :

1097
 

வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர்; அது நிற்க, நீர் என்பால் பிணக்குக் கொண்டிருந்தும், யான் அதனை உணர்ந்திலேன்; உம் அடியேனும், 'நம்பியாரூரன்' என்னும் பெயரினேனும் ஆகிய யான் உம்மை இங்குப் பலவிடத்துந் தேடியும் காண்கின்றிலேன்; அதனால், உம்மை யான் நேர்படக்கண்ட திருவாரூரையே நினைப்பேனாயினேன்; ஓலம்!

கு-ரை: இறுதித் திருப்பாடலையும் திருக்கடைக்காப்பாக அருளாது, முன்னைத் திருப்பாடல்கள் போலவே அருளிச்செய்தார், அதுகாறும் தம் பாடற் பயனைத் தாம் காணாமையின். அங்ஙனமாயினும், 'இது திருக்கடைக் காப்பிற்குரிய திருப்பாடல்' எனவும், 'இதன் பின்பும் நீர் அருள் பண்ணுதலும் பண்ணாதொழிதலும் உம் இச்சை வயத்தன' எனவும் விண்ணப்பிப்பார், 'தொண்டன் ஊரனேன்' எனத் தம் பெயரைப் பெய்து அருளிச்செய்தார். இதன் பின்பு இறைவர், கன்று தடையுண்டெதிரழைக்கக் கதறிக்கனைக்கும் புனிற்றாப்போல், சராசரங்கள் எல்லாங்கேட்க, 'ஓலம்' என எதிர்மொழி கொடுத்து, யாற்று நீரை விலக அருளினாராகலின், இத் திருப்பதிகமும் ஏனைய திருப்பதிகங்கள்போல, தன்னை ஓதுவார்க்கு எல்லாப் பயனையும் அருளுவதாதல் அறிந்துகொள்க.

சேரமான் பெருமாள் நாயனார் புராணம்
 

செஞ்சொல் தமிழ்நா வலரகோனும்

சேரர்பிரானும் தம் பெருமான்

எஞ்சல் இல்லா நிறையாற்றின்

இடையே அளித்த மணல் வழியில

தஞ்ச முடய பரிசனமும்

தாமும் ஏறித் தலைச்சென்று

பஞ்சநதிவா ணரைப் பணிந்து

விழுந்தார் எழுந்தார் பரவினார்.

138

-தி. 12 சேக்கிழார்