பக்கம் எண் :

1098
 

78. திருக்கேதாரம்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருக்காளத்தி தொழுது அங்கிருக்கும் நாட்களில் திருக்கேதார மலையை நினைந்து அங்குச் சென்று பணிந்தார்போல இன்புற்றுப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.12. ஏயர்கோன். புரா. 198)

குறிப்பு: இத் திருப்பதிகம், உலகத்தார்க்கு உறுதிப் பொருளை உணர்த்தி அருளிச் செய்தது.

பண்: நட்டபாடை

பதிக எண்: 78

திருச்சிற்றம்பலம்

792.வாழ்வாவது மாயம்மிது

மண்ணாவது திண்ணம்

பாழ்போவது பிறவிக்கடல்

பசிநோய்செய்த பறிதான்

தாழாதறஞ் செய்ம்மின்தடங்

கண்ணான்மல ரோனும்

கீழ்மேலுற நின்றான்திருக்

கேதாரமெ னீரே.



1. பொ-ரை: உலகீர், பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய்; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய்; ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே; அதன் பொருட்டு, நீவிர் நீட்டியாது விரைந்து அறத்தைச் செய்ம்மின்கள்; பெரிய கண்களையுடையவனாகிய திருமாலும், மலரில் இருப்பவனாகிய பிரமனும் நிலத்தின் கீழும், வானின்மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லுமின்கள்.

கு-ரை: முதற்கண் வந்த, 'ஆவது' என்பது, எழுவாய்ப்பொருள் தருவதோர் இடைச்சொல்.

''போவது'' என்றது, 'போகவேண்டுவது' எனப் பொருள்