| | 798. | பண்ணின்தமிழ் இசைபாடலின் |  |  | பழவேய்முழ வதிரக் |  |  | கண்ணின்னொளி கனகச்சுனை |  |  | வயிரம்மவை சொரிய |  |  | மண்ணின்றன மதவேழங்கள் |  |  | மணிவாரிக்கொண் டெறியக் |  |  | கிண்ணென்றிசை முரலுந்திருக் |  |  | கேதாரமெ னீரே. |  |  | 7 | 
| 799. | முளைக்கைப்பிடி முகமன்சொலி |  |  | முதுவேய்களை இறுத்துத் |  |  | துளைக்கைக்களிற் றினமாய்நின்று |  |  | சுனைநீர்களைத் தூவி | 
 "சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே"(தி. 6 ப. 36 பா. 9) என்றும், "அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே"(தி. 6 ப. 78 பா. 1) என்றும் அருளிச்செய்தார், ஆளுடைய அரசரும். 7. பொ-ரை: உலகீர், பண்ணாகிய, தமிழ்ப்பாடலினது இசையைப் பாடுமிடத்து, அதற்கியையப் பழைதாகிய வேய்ங்குழலும், மத்தளமும் ஒலித்தலினாலும், கண்ணுக்கு இனிதாகிய ஒளியையுடைய பொன் வண்ணமான சுனைகள் வயிரங்களை அலைகளால் எடுத்து வீசுதலினாலும், நிலத்தில் நிற்கின்ற மத யானைகள், மாணிக்கங்களை வாரி இறைத்தலினாலும், 'கிண்' என்கின்ற ஓசை இடையறாது ஒலிக்கின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லுமின்கள். கு-ரை:  'பண்ணின் இசை' என இயையும். இவ்விடத்து இன், அல்வழிக்கண் வந்த சாரியையாம். பழைமை, மரபு. "வேய்" ஆகுபெயர். 8. பொ-ரை: உலகீர், சிறிய கையை உடைய பெண்யானைகள், துளையையுடைய கையையுடைய ஆண் யானைகட்கு உறவாய் நின்று, முகமன்கூறி, பெரிய மூங்கில்களை ஒடித்துக் கொடுத்து,  |